இடுகைகள்

கதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு கருப்பு பெல்ட்..!

வழக்கமான மாலைப்பொழுது. அலுவலகம் முடிந்து எப்போதும் போல் வீட்டிற்கு வந்து உடைகளை மாற்ற எண்ணினேன். நான் வீட்டிற்கு வரவும், அகில் எழுந்திருக்கவும் சரியாக இருந்தது. என்னைக் காட்டவேண்டி அகிலைப் படுக்கையிலிருந்து தூக்கிக்கொண்டு வந்தார் விக்கி. காலையில் மனமில்லாமல் அலுவலகத்திற்கு என்னை வழியனுப்பியவன், மாலை நான் வீட்டிற்கு வந்ததும் மிகவும் குஷியாகிவிட்டான். விக்கியின் கைகளில் இருந்த அவன், என்னைப் பார்த்ததும் உடனே இறங்கிக்கொண்டு, வாய் நிறைய புன்னகையுடன் தன் கை இரண்டையும் நீட்டியவாறே குதித்துக் குதித்து என்னைப்பிடிக்க ஓடிவந்தான். ஆசையாய் ஓடிவந்தவன் என்னைக் கட்டிக்கொள்வான் என எதிர்பார்த்தேன். ஆனால் அவனோ, அருகில் வந்ததும் நின்றுவிட்டான். நின்றதோடு மட்டுமில்லாமல் என் வலது கையையே பார்த்துக்கொண்டிருந்தான். அப்படி என்ன நான் கையில் வைத்திருக்கிறேன் என எனக்கே யோசனை தோன்ற என் வலது கையைப் பார்த்தேன். என் வலது கையில் என் பெல்ட் மட்டும் இருந்தது. "இதையா ஆச்சரியமாகப் பார்க்கிறான்?" என்றெண்ணி "வேணுமா?" என்று அவனைப் பார்த்தவாறே கையில் இருந்த பெல்ட்டை அவன் கைகளுக்கு அருகில் கொண்டு சென்றேன். ...

ஸிகார் பொக்கிஷம் - ஆகாயத்தின் சாவி..!

சமரின் பேச்சை அரசர் நம்ப ஒரு துளியும் தயாராக இல்லை. இருந்தாலும் சமர் சொல்ல ஆரம்பிச்ச விஷயம் பெரிசா இருந்ததால ஒரு கணம் அரசர் யோசிச்சாரு.  மறுபடியும் ஒரு முறை சமர் கிட்ட திரும்ப கேட்டாரு, "உண்மையை சொல்லு. ஆகாயத்தின் சாவி உன்கிட்டயா இருக்கு?" அப்படின்னு. சமர், தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு, ஒரு பெருமூச்சை வாங்கிக்கிட்டு, அழுத்தம் திருத்தமா, இன்னொரு முறை சொன்னான். "ஆமா. ஆகாயத்தின் சாவி என்கிட்டே தான் இருக்கு!"ன்னு "உன்ன நான் எப்படி நம்புறது?" அப்படின்னு அரசர் கேட்க, சமர் தன் இடது கையை மூடியிருந்த சட்டை துணியை விலக்கி கையை நீட்டினான். அரசர் அவன் கையை பார்த்த போது, அவரையே அறியாம அவரோட கண் ஆச்சரியத்தில பெருசா விரிய ஆரம்பிச்சது. அதுவரை பழைய கதைகளிலும், மற்றவர்கள் வாயால சொல்லியும் கேள்விப்பட்ட அந்த விஷயத்தை நேர்ல பார்க்கும் போது, துருப அரசருக்கு ஒரு நிமிடம் அவருக்கு மூச்சே நின்னுடும் போல இருந்தது. சமர் காட்டிய இடது கையில ரொம்ப கருமையான மையால பச்சை குத்தினது மாதிரி அழுத்தமா பதிஞ்சு இருந்தது ஒரு உருவம். தலையின் இரண்டு பக்கமும் காதுகளுக்கு மேல மூணு நாலு ராட்சத...

ஸிகார் பொக்கிஷம் - தூக்கு தண்டனை குற்றவாளி..!

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால இந்து மகா சமுத்திரத்தில இருந்த ஆயிரக்கணக்கான தீவுகள்ல மிக முக்கியமான தீவா கருதப்பட்டது தான் யாசிந்தன் மன்னன் ஆட்சி செய்யுற துருப தேசம். தலைமுறை தலைமுறையா நல்லாட்சியையும் மக்களின் நன்மையையும் மட்டுமே மனசில வச்சிக்கிட்டு ஆட்சி செஞ்சுகிட்டு வர்ற அரச குடும்பம் தான், யாசிந்தன் மன்னனுடையது. கண்ணுக்கெட்டுற தூரம் வரை இருக்குற கடலும், இயற்கை வளம் நிறைந்த அந்த தீவும் தான், துருப நாட்டு மக்கள் கட்டிக் காப்பாத்திட்டு வந்த சொத்து. வழி வழியா வந்த முன்னோர்களோட கடல் வாணிப திறமையினாலையும், மூச்சடக்கி கடலுக்குள்ள இறங்கி முத்து பவளம் போன்ற பல ரத்தினங்களை சேகரிச்சு விற்பதனாலையும் பல நாடுகளில் இருந்தும் மக்கள் துருப தேசத்தை நோக்கி எப்போதும் வந்துக்கிட்டே இருப்பாங்க. துருப தேசமும் எப்போவுமே ஒரு பெரிய நகரம் மாதிரி தொழில் வளம் மிகுந்த இடமா இருந்துச்சு. தீவின் நடுவுல பிரம்மாண்டமா உயர்ந்து நிக்கிற மரங்கள் நிறைந்த கோசாரமலை பலவிதமான உயிரினங்களும் வாழ வழிவகை செஞ்சு வச்சிருந்தது. தீவு முழுவதும் பரவிக்கிடந்த தென்னை மரங்களும், வாழை மரங்களும், பலவகையான செடி கொடிகளும் அந்த தீவை எப்போதும...

ஸிகார் பொக்கிஷம் - தேடல் ஆரம்பம்..!

முதன் முதல்ல மனுஷன் இந்த பூமியில தோன்றி சுமார் 70 லட்சம் வருஷங்கள் ஆயிருச்சு. ஆரம்பத்துல காடு, மேடு, மலைகள்ல  வாழ்ந்துகிட்டு இருந்த மனுஷன், தன்னை சுத்தி நடக்குற ஒவ்வொரு விஷயத்தை பாத்தும் பயந்துகிட்டே இருந்தான். இடி இடிச்சாலோ, மின்னல் வெட்டினாலோ, மழை வெள்ளம் வந்தாலோ, காடு பத்தி எரிஞ்சாலோ, இல்ல ஏதாவது மிருகம் தன்னை துரத்தினாலோ, மனுஷன் பயந்து ஓடிக்கிட்டே இருந்தான். அவன் பயப்படறதுக்கு அவனை சுத்தி பல விஷயங்கள் அப்போ இருந்துச்சு. தன்னை காப்பாத்திக்க தன்னால என்ன செய்யமுடியுமோ அதெல்லாம் மனுஷன் செய்ய ஆரம்பிச்சான். மத்த மிருகங்கள் எப்படி ஆபத்து நேரத்துல தன்னை பாதுகாத்துக்குதுங்கன்னு பார்த்து அதெல்லாம் செய்ய ஆரம்பிச்சான். மழை வெயில்ல இருந்து தப்பிக்க குகைகள்ல வாழ ஆரம்பிச்சான். மிருகங்களோட தோலை எடுத்து ஆடையா போர்த்திக்கிட்டான். பயமுறுத்துனா பயந்து ஓடக்கூடிய மிருகங்களை சத்தம் போட்டு பயமுறுத்துனான். தன்னை விட பெரிய மிருகங்களை கூர்மையான கற்களை ஆயுதங்களா பயன்படுத்தி விரட்டினான். தன்னால சமாளிக்க முடியாத மிருகங்களை மத்த மனுஷங்களோட சேர்ந்து கூட்டா எதிர்க்க ஆரம்பிச்சான். மிருக மாமிசங்களை மட்டுமே நம்பி...

உயிர்ப்பி! (ஒரு பிரபஞ்சம் கடந்த பயணம்!)

படம்
" பிளிங்க் ! பிளிங்க் ! பிளிங்க் !" இடைவிடாமல் ஒளி சமிக்ஞைகளை (Light Signals) தன்னுடைய கையில் இருந்த எமிட்டரை (Emitter) வைத்து அனுப்பிக்கொண்டிருந்தான் வினய் . சில நிமிட காலம் மட்டுமே திறந்திருக்கும் அந்த வார்ம் ஹோலை (Worm Hole)*   அவன் பயன்படுத்த இது தான் சரியான தருணம் . இதை விட்டுவிட்டால் அடுத்து இதுபோல் ஒரு வார்ம் ஹோலைக் கண்டுபிடிப்பது மிகச்சிரமம் . மிகச்சிரமம் மட்டுமல்ல . ஒருவேளை அவனுடைய ஆயுட்காலத்தில் அது முடியாமல் கூட போகலாம் . அதனால் தன்னால் முடிந்தமட்டும் ஒளி சமிக்ஞைகளை அந்த வார்ம் ஹோலுக்குள் அனுப்பிக் கொண்டிருந்தான் . இடையிடையே தன்னுடைய ரிசெப்டாரில் (Receptor) ஏதேனும் பதில் சமிக்ஞைகள் வருகிறதா என்று கண்காணித்துக்கொண்டே இருந்தான் . " இன்னும் எவ்வளவு நேரம் டா வினய் ?" ஒருவாறாக பொறுமையிழந்து வினய்யின் கவனத்தைக் கலைத்தான் சித்தார்த் . வினய்யின் நண்பன் என்று சொல்வதை விட வினய்யின் நிழல் என்று சித்தார்த்தைக் கூறலாம் . அவ்வளவு தூரம் வினய்யின் நெருங்கிய நண்பனாக இருந்தான் . ஆன...

ஒரு விபரீத விளையாட்டு!

"ஆதி. ஓடு. ஓடு. நிக்காம ஓடு" - என கத்திக்கொண்டே பின்னால் ஓடிவந்தான் நகுல். அவன் பின்னே பரத்தும் இன்பாவும் பின்னங்கால் பிடரியில் படும் அளவு ஓடி வந்துகொண்டிருந்தார்கள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தோம் நால்வரும். மாட்டிக்கொண்டால் உயிர் போவது நிச்சயம். தேவையா இந்தத் தொல்லை எனது தோன்றியது. முதலிலேயே இன்பா வேண்டாம் என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சினான். நாங்கள் இந்தக் காட்டிற்குள் வந்ததும் இல்லாமல் அவனையும் வலிய இழுத்து வந்தோம். இப்போது எல்லோருடைய உயிரும் இந்தக் காட்டுவாசிகளின் கையால் போய்விடும் போல் இருக்கிறது. உயிர் பிழைத்தால் நிச்சயம் இந்தப்பக்கம் வரவே கூடாது என்று தோன்றியது. "ஆஆ. ஹூஹூ! ஹூஹூ! ஹோ. ஹோ. ஹோ" என அலறிக்கொண்டே பின்தொடர்ந்தார்கள் அந்தக் காட்டுவாசிகள். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் துரத்திக் கொண்டு முன்னால் வந்துகொண்டிருந்தான் அவர்களின் தலைவன். அவன் துரத்தி வரும் வேகமும் ஆக்ரோஷமும் பாகுபலியின் காளகேயனைப் போல் இருந்தது. பின்னால் வருபவர்களும் காளகேயனின் கூட்டத்தினர் போலத்தான் இருந்தார்கள். கண்டிப்பாக இவர்கள் கையில் மாட்டிக்கொண்டால் நிச்...

ஜூனியர் அலப்பறைகள்

நான்: பாப்பா என்னமா பண்ணிக்கிட்டு இருக்க? என் தங்கச்சி பொண்ணு: வீடு கட்டிக்கிட்டு இருக்கேன். நான்: அதென்ன வீட்டுக்குள்ள ஏதோ நீளமா இருக்கு? என் தங்கச்சி பொண்ணு: அது HIT. வீட்டுக்குள்ள கப்பான் (கரப்பான்) பூச்சி வந்தா என்ன செய்யுறது? #ஜூனியர்_அலப்பறைகள்

ஒரு பயணம்

ஒரு வழியாக நான் அந்த குளிர்சாதனப் பேருந்தில் ஏறியிருந்த போது, மழை வலுத்திருந்தது. காற்றின் அசாத்திய வேகமும், இடியின் ஓலமும், மழையின் தீவிரமும் பேருந்தின் கூரையைப் பிளந்துகொண்டு உள்ளே வந்துவிடவா என்று கேட்டுக்கொண்டிருந்தது. யார் மீது என்ன கோபமோ அவைகளுக்கு? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. பயணச்சீட்டை வாங்கிவிட்டுக் காலியாய் இருந்த ஓர் இருக்கையைத் தேடி அமர்ந்து கொண்டேன். முக்கால்வாசி மட்டுமே நிரம்பியிருந்த பேருந்தில் அமர்வதற்கு நிறைய இடம் இருந்தது. சில பெரியவர்கள் தங்கள் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். நடுத்தர வயதைத் தொட்டிருந்த சிலரோ, எதையோ எண்ணிச் சிந்தித்துக்கொண்டும், மொபைல் போனில் பேசிக்கொண்டும் இருந்தனர். என் வயதையொத்த சில யுவ, யுவதிகள் தங்கள் காதுகளை 'இயர் போனில்' சிறை வைத்திருந்தனர். சில காதல் ஜோடிகள் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்துகொண்டு மழையை அணு அணுவாய் ரசித்துக்கொண்டிருந்தனர். நடந்துகொண்டிருந்த இந்த அத்தனை நிகழ்வுகளுக்கும் சிறிதும் பொருத்தம் இன்றி என் மனதோடு போராடிக்கொண்டிருந்தேன் நான். மூளைக்குள் குடைந்துகொண்டிருக்கும் அந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரியவ...

ஒரு வெட்டி(பையன்) கதை

இந்தக் கதையின் நாயகன், நாயகன் அப்படின்னுலாம் சொல்ல முடியாது. கதையோட கரு (ஓவரா பேசுறேன்ல) என்னை சுத்தி இருக்குறதுனால, ஒரு வகையில என்னை பத்தின கதைன்னு வச்சுக்கலாம். ங்கொய்யால நீயெல்லாம் ஹீரோவா அப்டின்னு நீங்க கேக்குறது தெரியுது. ஆனாலும், உங்களுக்கு வேற வழி கெடையாது. இந்தக் கொடுமையெல்லாம் நீங்க அனுபவிச்சுத் தான் ஆகணும். என்னை சுத்தி நடக்கவே நடக்காத விஷயங்கள வச்சு ஒரு கதை எழுதலாம்னு நெனச்சப்பதான் இந்த ஐடியா வந்துச்சு. இந்தக் கதை நல்லா இருக்குனு நெனச்சிங்கன்னா, இன்னொரு கதை எழுதி உங்கள சந்தோஷ(???)ப்படுத்துவேன். மொக்கையா இருக்குனு சொன்னிங்கன்னா, நல்லா இருக்குனு நீங்க ஒத்துக்குற வரை கதையா எழுதி சாவடிப்பேன். என்ன பண்லாம்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க.... ;) ஓகே. லெட்ஸ் ஸ்டார்ட் தி கதை. பகுதி-1: ஆபிஸ் அலப்பரை இன்னையில இருந்து சரியா ஒரு வருஷம் மூணு மாசத்துக்கு முன்னாடி, ஏதோ ஒரு நாள்....! வழக்கம் போல, என்னோட ரெட் கலர் அபாச்சி பைக்க பார்க்கிங் ல போட்டுட்டு இன்னிக்கி என்ன வில்லங்கத்த சந்திக்கப் போறோமோன்னு ஒரு பீதியோடையே ஆபிசுக்குள்ள நுழைஞ்சேன். ஆக்சஸ் கார்ட எடுத்து கதவுகிட்ட காட்டிட்டு, தி...

நவீன் - பிரமிளா - சில நிமிடங்கள்

"நவீன்ன்ன்" - பிரமிளாவின் அலறல் அந்த சிறிய பங்களாவின் அனைத்து சுவர்களிலும் பட்டு எதிரொலித்து, அவ்வளவு நேரம் அருகில் இருந்துவிட்டு அப்போது தான் தண்ணீர் வேண்டுமென்று பிரமிளா கேட்டதற்காக தண்ணீர் கொண்டுவர சமையலறைக்குள் சென்றிருந்த நவீனை அடைந்தது. இரண்டு வினாடிகளில், சமையலறையில் இருந்து, உணவருந்தும் அறை (டைனிங் ஹால்) , வாசிக்கும் அறை (ரீடிங் ஹால்) மற்றும் வரவேற்பாளர் அறையைத் (விசிட்டர் ஹால்) தாண்டி, எதிர்பட்ட அத்தனை சிறு பெரு தடைகளை (பொருட்களை) உடைத்தெறிந்துவிட்டு படுக்கை அறையை அடைந்தான் நவீன். உடலில் ஏற்பட்டிருந்த வலி கண்ணில் தெரிய, சாட்சியாய் சிறுதுளி நீரும் அரும்ப, 'அருகில் வந்துவிடு. உன் அருகாமை இப்போது எனக்குத் தேவை' என்பது போல் அமர்ந்திருந்தாள் நவீனின் அன்பு மனைவி பிரமிளா. வெளியில் சொல்லாவிட்டாலும் விழி கூறியது நவீன் படும் அவஸ்தையை. "நவீன். பிரமிக்கு வலி வந்துருச்சுப்பா. சீக்கிரம் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்பா" - என்றவாறே அடுத்து செய்ய வேண்டியதை நினைவூட்டினாள் ராஜம். பல நூறு மைல்கள், மற்றும் சில நாடுகள் தாண்டி வந்து நியூ யார்க் மாகணத்தில் வந்து குடி...

பொன்னம்மாள் பாட்டி

"அய்யனாரப்பா! என் புள்ளைய நீதான் எப்பவும் பாத்துக்கணும். அவனுக்கு எந்த ஒரு நோய் நொடியும் வந்துராம, நல்லபடியா இருக்கணும். அவனுக்கு யாராலையும் எந்த தொல்லையும் வந்துரக் கூடாது. முக்கியமா, அந்த மூணாவது தெருல இருக்குறாளே அந்த முண்டக்கண்ணி, அவ என் மவன் மேல எந்தக் கண்ணும் வச்சுடக்கூடது. கடன்காரி. அவ முழியே சரியில்ல. வேற எந்த ஒரு குத்தம் குறை பண்ணியிருந்தாலும் எம்மகன மன்னிச்சு அவன நல்லபடியா பார்த்துக்கப்பா. அவன் நல்லபடியா வளந்து, பெரிய ஆளாகி, நாலு பேரு மெச்சுற மாதிரி பெரிய உத்தியோகஸ்தனா வரணும். பெரிய கொழாய் சட்டையெல்லாம் மாட்டிக்கிட்டு தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கலீசுல பேசணும். இதையெல்லாம் இந்த சிறுக்கி பார்த்துப்புட்டு தான் கண்ண மூடனும். இதெல்லாம் நீதானப்பா நடத்தி வைக்கணும். இதெல்லாம் நடந்துட்டா, வருஷந்தவராம உன் எல்லைக்கு வந்து, கெடா வெட்டி பொங்க வைக்கிறேன்யா சாமி. நீதான் பாத்துக்கணும். நீதான் பாத்துக்கணும்". அய்யனார் காலடியில் இருந்த விபூதியை கை நிறைய எடுத்து நெற்றி முழுக்க இட்டுக்கொண்டாள் வேலம்மாள். தன் மனதில் இருந்த எல்லா வேண்டுதலையும், சரியாகச் சொன்னால் ஒரே ஒரு வேண்டுதலை அய்யனாரின் எ...

கண்ணு தெரியலம்மா.... :(

ஏதோ ஒரு நடுநிசி இரவில், ஒரு 8 வயது சிறுவன். மகன்: (ஒரு வித பதற்றமான லேசான அழுகையுடன்) அம்மா, அம்மா, எனக்கு கண்ணு தெரியாம போச்சும்மா, அம்மா கண்ணு தெரியாம போச்சுமா. அம்மா: (பதறியடித்தவாறே) என்னடா சொல்லுற? என்ன ஆச்சு? மகன்: ஆமாம்மா, எனக்கு எதுவுமே தெரியல. நீ எங்க இருக்கணு தெரியல. அப்பா, பாப்பாவல்லாம் (தங்கை) தெரியல. அங்க பாரும்மா, நைட்ல நம்ம போட்டு வச்சுருப்போமே ஒரு விடி லைட் (இரவு நேர சிறிய பல்பு) அது கூட தெரியலம்மா. நெஜமாவே எனக்கு கண்ணு தெரியலம்மா. எல்லாமே இருட்டா இருக்குதும்மா.. ஹீஎஈஈஈ...... அம்மா: டே கிறுக்கா. கரண்ட் போயிருச்சுடா. ஏதாவது உளராம பேசாம படுத்து தூங்கு. என் தூக்கத்த வேற கெடுத்துகிட்டு. இதுல அழுகை வேற. மகன்: (ஒரு பெருமூச்சுடன்) கரண்ட்டு போச்சா, நான் கூட எனக்கு கண்ணு தெரியலையோனு நெனச்சேன். குறிப்பு: அந்த கிறுக்கன் நான்தான்.

என்னருகே நீயிருந்தால் - பகுதி 3

3. சிறு முதல் சிரிப்பு ' ஏண்டி இப்படி செஞ்ச ?' என்று நான் கோபப்படும் முன் , ' என்ன மன்னிச்சிடுடா ' என்று கட்டிக் கொள்கிறாய் . அப்புறம் , கோபம் எப்படி வரும் ? காதல் தான் வரும் . நாளை அந்த புத்தகத்தை தருவதாய்ச் சொல்லி , எப்படியோ சமாளித்து அபர்ணாவை அன்று அனுப்பி வைத்துவிட்டேன் . பள்ளிகூட நண்பன் ஒருவனிடம் அந்த புத்தகம் இருப்பதை அறிந்து , அவனிடம் சென்று வாங்கி வந்தேன் அபர்ணாவிடம் கொடுப்பதற்காக . ( அது ஏன் எங்க கிளாஸ் ல ஒருத்தர் கிட்ட கூட அந்த புக் இல்லன்னு 5 நிமிடம் கழிச்சு சொல்றேன் ) அடுத்தநாள் காலை , எங்கள் கல்லூரியில் ... " தம்பி வேலு . அண்ணி எங்கப்பா ?" - நான் அபர்ணாவின் சக வகுப்பு மாணவனான , முத்து வேல் , என்கிற வேலுவை விசாரித்துக் கொண்டிருந்தேன் . அபர்ணாவைப் பற்றி நான் அறிந்துகொள்ள எனக்கு இருக்கும் ஒரே ஒரு ஆள் இவன்தான் . ( பையன் ரொம்ப நல்லவன் . இல்லனா , என்ன பார்த்து பயப்புடுவானா ?) பதில் ஏதும் சொல்லாமல் , புதிதாய் யாரையோ பார்ப்பது போல் என்னைப் பார்த்த...