இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஸிகார் பொக்கிஷம் - தேடல் ஆரம்பம்..!

முதன் முதல்ல மனுஷன் இந்த பூமியில தோன்றி சுமார் 70 லட்சம் வருஷங்கள் ஆயிருச்சு. ஆரம்பத்துல காடு, மேடு, மலைகள்ல  வாழ்ந்துகிட்டு இருந்த மனுஷன், தன்னை சுத்தி நடக்குற ஒவ்வொரு விஷயத்தை பாத்தும் பயந்துகிட்டே இருந்தான். இடி இடிச்சாலோ, மின்னல் வெட்டினாலோ, மழை வெள்ளம் வந்தாலோ, காடு பத்தி எரிஞ்சாலோ, இல்ல ஏதாவது மிருகம் தன்னை துரத்தினாலோ, மனுஷன் பயந்து ஓடிக்கிட்டே இருந்தான். அவன் பயப்படறதுக்கு அவனை சுத்தி பல விஷயங்கள் அப்போ இருந்துச்சு. தன்னை காப்பாத்திக்க தன்னால என்ன செய்யமுடியுமோ அதெல்லாம் மனுஷன் செய்ய ஆரம்பிச்சான். மத்த மிருகங்கள் எப்படி ஆபத்து நேரத்துல தன்னை பாதுகாத்துக்குதுங்கன்னு பார்த்து அதெல்லாம் செய்ய ஆரம்பிச்சான். மழை வெயில்ல இருந்து தப்பிக்க குகைகள்ல வாழ ஆரம்பிச்சான். மிருகங்களோட தோலை எடுத்து ஆடையா போர்த்திக்கிட்டான். பயமுறுத்துனா பயந்து ஓடக்கூடிய மிருகங்களை சத்தம் போட்டு பயமுறுத்துனான். தன்னை விட பெரிய மிருகங்களை கூர்மையான கற்களை ஆயுதங்களா பயன்படுத்தி விரட்டினான். தன்னால சமாளிக்க முடியாத மிருகங்களை மத்த மனுஷங்களோட சேர்ந்து கூட்டா எதிர்க்க ஆரம்பிச்சான். மிருக மாமிசங்களை மட்டுமே நம்பி வாழ