இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உனக்காக மட்டும்!

உனக்காக மட்டும் எழுதப்படுகிறது என் கவிதைகள்! உனக்காக மட்டும் வாழப்படுகிறது என் வாழ்க்கை! -செல்லா

நீ நடக்கும் தெருக்கள்

படம்
நீ நடக்கும் தெருக்கள் மட்டும் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்படுகின்றன! - செல்லா

இனிய காலை

படம்
இக்காலை இனிய காலை ஆகிறது. உன் இதம் தரும் முத்தத்தால்! ♥️♥️ -செல்லா

அன்னை நீ!

முப்பது வயது குழந்தையைத் தத்தெடுத்த அன்னை நீ!! ♥️♥️ - செல்லா

உயிர்ப்பி! (ஒரு பிரபஞ்சம் கடந்த பயணம்!)

படம்
" பிளிங்க் ! பிளிங்க் ! பிளிங்க் !" இடைவிடாமல் ஒளி சமிக்ஞைகளை (Light Signals) தன்னுடைய கையில் இருந்த எமிட்டரை (Emitter) வைத்து அனுப்பிக்கொண்டிருந்தான் வினய் . சில நிமிட காலம் மட்டுமே திறந்திருக்கும் அந்த வார்ம் ஹோலை (Worm Hole)*   அவன் பயன்படுத்த இது தான் சரியான தருணம் . இதை விட்டுவிட்டால் அடுத்து இதுபோல் ஒரு வார்ம் ஹோலைக் கண்டுபிடிப்பது மிகச்சிரமம் . மிகச்சிரமம் மட்டுமல்ல . ஒருவேளை அவனுடைய ஆயுட்காலத்தில் அது முடியாமல் கூட போகலாம் . அதனால் தன்னால் முடிந்தமட்டும் ஒளி சமிக்ஞைகளை அந்த வார்ம் ஹோலுக்குள் அனுப்பிக் கொண்டிருந்தான் . இடையிடையே தன்னுடைய ரிசெப்டாரில் (Receptor) ஏதேனும் பதில் சமிக்ஞைகள் வருகிறதா என்று கண்காணித்துக்கொண்டே இருந்தான் . " இன்னும் எவ்வளவு நேரம் டா வினய் ?" ஒருவாறாக பொறுமையிழந்து வினய்யின் கவனத்தைக் கலைத்தான் சித்தார்த் . வினய்யின் நண்பன் என்று சொல்வதை விட வினய்யின் நிழல் என்று சித்தார்த்தைக் கூறலாம் . அவ்வளவு தூரம் வினய்யின் நெருங்கிய நண்பனாக இருந்தான் . ஆன