கண்ணு தெரியலம்மா.... :(
ஏதோ ஒரு நடுநிசி இரவில், ஒரு 8 வயது சிறுவன்.
மகன்: (ஒரு வித பதற்றமான லேசான அழுகையுடன்) அம்மா, அம்மா, எனக்கு கண்ணு தெரியாம போச்சும்மா, அம்மா கண்ணு தெரியாம போச்சுமா.
அம்மா: (பதறியடித்தவாறே) என்னடா சொல்லுற? என்ன ஆச்சு?
மகன்: ஆமாம்மா, எனக்கு எதுவுமே தெரியல. நீ எங்க இருக்கணு தெரியல. அப்பா, பாப்பாவல்லாம் (தங்கை) தெரியல. அங்க பாரும்மா, நைட்ல நம்ம போட்டு வச்சுருப்போமே ஒரு விடி லைட் (இரவு நேர சிறிய பல்பு) அது கூட தெரியலம்மா. நெஜமாவே எனக்கு கண்ணு தெரியலம்மா. எல்லாமே இருட்டா இருக்குதும்மா.. ஹீஎஈஈஈ......
அம்மா: டே கிறுக்கா. கரண்ட் போயிருச்சுடா. ஏதாவது உளராம பேசாம படுத்து தூங்கு. என் தூக்கத்த வேற கெடுத்துகிட்டு. இதுல அழுகை வேற.
மகன்: (ஒரு பெருமூச்சுடன்) கரண்ட்டு போச்சா, நான் கூட எனக்கு கண்ணு தெரியலையோனு நெனச்சேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக