இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஸிகார் பொக்கிஷம் - தூக்கு தண்டனை குற்றவாளி..!

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால இந்து மகா சமுத்திரத்தில இருந்த ஆயிரக்கணக்கான தீவுகள்ல மிக முக்கியமான தீவா கருதப்பட்டது தான் யாசிந்தன் மன்னன் ஆட்சி செய்யுற துருப தேசம். தலைமுறை தலைமுறையா நல்லாட்சியையும் மக்களின் நன்மையையும் மட்டுமே மனசில வச்சிக்கிட்டு ஆட்சி செஞ்சுகிட்டு வர்ற அரச குடும்பம் தான், யாசிந்தன் மன்னனுடையது. கண்ணுக்கெட்டுற தூரம் வரை இருக்குற கடலும், இயற்கை வளம் நிறைந்த அந்த தீவும் தான், துருப நாட்டு மக்கள் கட்டிக் காப்பாத்திட்டு வந்த சொத்து. வழி வழியா வந்த முன்னோர்களோட கடல் வாணிப திறமையினாலையும், மூச்சடக்கி கடலுக்குள்ள இறங்கி முத்து பவளம் போன்ற பல ரத்தினங்களை சேகரிச்சு விற்பதனாலையும் பல நாடுகளில் இருந்தும் மக்கள் துருப தேசத்தை நோக்கி எப்போதும் வந்துக்கிட்டே இருப்பாங்க. துருப தேசமும் எப்போவுமே ஒரு பெரிய நகரம் மாதிரி தொழில் வளம் மிகுந்த இடமா இருந்துச்சு. தீவின் நடுவுல பிரம்மாண்டமா உயர்ந்து நிக்கிற மரங்கள் நிறைந்த கோசாரமலை பலவிதமான உயிரினங்களும் வாழ வழிவகை செஞ்சு வச்சிருந்தது. தீவு முழுவதும் பரவிக்கிடந்த தென்னை மரங்களும், வாழை மரங்களும், பலவகையான செடி கொடிகளும் அந்த தீவை எப்போதும