இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அழகான பாதைகள்

படம்
 சில அழகான பாதைகளைக் கண்டறிகிறோம், எங்கே போகிறோம் எனத் தெரியாமல் தொலையும்போது..! -செல்லா

வாழ்வை வாழலாம்

படம்
வாருங்கள்! சிறிது  பாதை மாறிப்  போகலாம்! தார்ச்சாலைகளை விட்டுவிட்டு, சிலதூரம்  காடுகளுக்குள் செல்லலாம்! மண் பாதைகளையும், மலர் வாசங்களையும் கொஞ்சம் மனதோடு எடுத்து வரலாம்! நீண்ட நெடிய வனாந்தரத்திற்குள், சிறிது நடைபயணம் சென்று வரலாம்! மழை மேகங்களைத் தடுத்து நிறுத்தும் மலைகளுக்குக்  கவிதைகள் சில  பாடி வரலாம்! வெண்புகையாய் நம்மைச்சூழும் வெண்பனியை, விரலோடு கொஞ்சம் கொஞ்சி வரலாம்! தாய்ப்பாலாய்த் தாகம் தீர்க்கும் அருவிகளின் தாயன்பில்  நன்றாய் நனைந்து வரலாம்! ஓங்கி வளர்ந்த மரங்களின் தோப்பில் கொஞ்சம்  ஓய்வும் கொள்ளலாம்! தீராத நெடுவெளிகளில் காணாத உயிர்களைத் தேடித் திரியலாம்! மனிதன் தீண்டா தொலை தூரங்களைக் காலால் கொஞ்சம் அளந்து வரலாம்! விடியல் கொஞ்சம் விடைபெறும் வரை விளையாடிக் களிக்கலாம்! விளையாடிய களைப்பு தீர, மீண்டும் விடியும் வரை சிறிது விண்மீன்களின் அரவணைப்பில் உறக்கமும் கொள்ளலாம்! வாருங்கள். வாழ்வைக் கொஞ்சம் வாழலாம்..! -செல்லா

கவிதைத்தொகுப்பு

படம்
 

உன் பிறந்தநாள்

படம்
ஒரே ஒரு நாள் பிறந்தநாள் கொண்டாடுகிறாய். புலம்பியே சாகின்றன மீதமுள்ள 364 நாட்கள்..! -செல்லா

நீ மட்டும்

படம்
 இந்த உலகில் முன்னூறு கோடி பெண்களாம்..! நான் காதலிக்க நீ மட்டும் தான்..! -செல்லா

கவிதை

படம்
வெறும் காற்றில் விரல் அசைக்கிறாய். "கவிதை! கவிதை!" எனக் கூச்சலிடுகிறது காற்று..! -செல்லா

காதல் முளைக்கிறது

படம்
 கடிதத்திற்கும் காதல் முளைக்கிறது, உன் பெயரை அதில் எழுதும் போது..! -செல்லா

Leo கவிதை

படம்
 ஊரெல்லாம் Leo வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். நானோ உன் வருகைக்காகக் காத்திருக்கிறேன்..! -செல்லா

மௌன மொழி

படம்
 விழி பார்க்க வழி இல்லாததாலோ என்னவோ புரிய மறுக்கிறது உன் மௌன மொழிகள்..! -செல்லா

முதல் மழை

படம்
கந்தகம் பாய்ந்த தேசத்தில் பூச்செடி வளர்க்கச்சொல்கிறாய் மீண்டும் பொழியுமா, அந்த முதல் மழை..! -செல்லா

உன் மௌனம்

படம்
சில நிமிடங்கள் மௌனிக்கிறாய். சுற்றுவதை நிறுத்திவிடுகிறது என் உலகம்..! -செல்லா

நிறைவேறா ஆசைகள்

படம்
 ஒரு மழைக்கால நாளில் உன் தோளில் சாய்ந்து வேடிக்கை பார்க்கும் நிமிடங்கள், அழித்துப் போகின்றன என் நிறைவேறா ஆசைகளை..! - செல்லா

இந்தக் காதல்

படம்
 இரு துருவங்களில் தவிக்கும் நம்மை இணைக்குமா இந்தக் காதல்..! - செல்லா

என் வெண்ணிலவு

படம்
 விடியலே நீ வேண்டாம் போ. கோபத்தில் இருக்கிறது என் வெண்ணிலவு..! - செல்லா

உன் கோபம்

படம்
 சுருக்கென கோபம் கொண்டாய். மழையை விரட்டிவிட்டு வெயிலால் என்னை வதைக்கத் துவங்கியது வானம்..! - செல்லா

ஜன்னல் காற்று

படம்
 என் ஜன்னல் வந்த காற்றே, அவனது உறக்கத்தைத் தீண்டாமல் சென்றுவிடு..! - செல்லா

என் பெயர்

படம்
 தனிமையில் தவிக்கிறது என் பெயர். இணைத்துக் கொள்ளவா உன் பெயருடன்? -செல்லா

உன் வாசம்

படம்
 அம்மா வீட்டிலிருந்து நீ வரும் வரை உன் வாசத்தை சேமித்து வைக்கிறது நீ மறந்து விட்டுப்போன உன் சோப்பு..! - செல்லா

மழைக்கால வானம்

படம்
 உதிர்ந்து போன என் வாழ்வின் ஒவ்வொரு நம்பிக்கை இலைகளையும் மீண்டும் துளிர்விடச் செய்த மழைக்கால வானம் நீ..! - செல்லா

காதல் சேர்க்கிறது

படம்
 பிரியும் இமை தானே காட்சி கொடுக்கிறது. விலகும் நிலை தானே காதல் சேர்க்கிறது..! - செல்லா

காதல் பிரயாணம்

படம்
 வா. இன்னொரு முறை என் பைக்கில் ஏறி காதல் பிரயாணம் போகலாம்..! - செல்லா

உன் நினைவுகள்

படம்
 நீ இல்லா நேரங்களில் உன் நினைவுகளுடன் கைகோர்த்து நடக்கிறேன்..! - செல்லா

இதயம் காத்திருக்கிறது

படம்
 எழுத்தில் வடிக்கப்படும் கவிதைகளுடன் எழுத்தில் வராத இதயமும் காத்திருக்கிறது உனக்காகவே..! - செல்லா

நீ போதுமடி!

படம்
 அழுது தீர்க்க உன் தோளும், அயர்ந்து சாய உன் மடியும் இருந்தால் போதுமடி இந்த ஜென்மம் வாழ்ந்து முடிக்க..! - செல்லா

உன் கொலுசு

படம்
 ஆளற்ற அரங்காய் நிற்கிறது என் வீடு, உன் கொலுசின் சங்கீதத்திற்கு ஏங்கி..! - செல்லா 

உன் வீதி

படம்
 வெள்ளிக் கொலுசணிந்து நடந்து வருகிறாய். "தேவதை வருகிறது, ஆரத்தி எடுங்கள்" எனக் கூச்சலிடுகிறது உன் வீதி..! - செல்லா

உன் வருகை

படம்
மழை வரப்போவதை  முன் கூட்டியே  தெரிந்து கொள்ளும்  மயிலைப் போல்  நீ வரப்போவதை  முன் கூட்டியே  தெரிந்து கொள்கிறது  என் இதயம்..! - செல்லா 

பாட்டியின் சமையல்

படம்
மழலைக் கால  நினைவுகளையும் சேர்த்தே  பரிமாறிப் போகிறது  பாட்டியின் சமையல்..! - செல்லா

சுடிதார் காதலி

படம்
 எதிர்வீட்டுச்  சுடிதார் காதலியிடம், கையசைத்துக்  கவிதை பேசுகிறது காற்றில் ஆடும் சட்டை...!  - செல்லா

என் வாழ்க்கை

படம்
 எதை எண்ணி நாட்கள் ஓடுகிறதோ, எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து உன்னை எண்ணித்தான் என் வாழ்க்கை ஓடுகிறது..! - செல்லா

என் வானம்

படம்
 மெலிதாய் ஒரு முத்தம் இட்டுப் போ. விடியட்டும் என் வானம்..! - செல்லா

உன் தலையணை

படம்
என் தாய் மடியாகிறது உன் தலையணை நீ அருகில் இல்லா நேரங்களில்..! - செல்லா

ஒரு கருப்பு பெல்ட்..!

வழக்கமான மாலைப்பொழுது. அலுவலகம் முடிந்து எப்போதும் போல் வீட்டிற்கு வந்து உடைகளை மாற்ற எண்ணினேன். நான் வீட்டிற்கு வரவும், அகில் எழுந்திருக்கவும் சரியாக இருந்தது. என்னைக் காட்டவேண்டி அகிலைப் படுக்கையிலிருந்து தூக்கிக்கொண்டு வந்தார் விக்கி. காலையில் மனமில்லாமல் அலுவலகத்திற்கு என்னை வழியனுப்பியவன், மாலை நான் வீட்டிற்கு வந்ததும் மிகவும் குஷியாகிவிட்டான். விக்கியின் கைகளில் இருந்த அவன், என்னைப் பார்த்ததும் உடனே இறங்கிக்கொண்டு, வாய் நிறைய புன்னகையுடன் தன் கை இரண்டையும் நீட்டியவாறே குதித்துக் குதித்து என்னைப்பிடிக்க ஓடிவந்தான். ஆசையாய் ஓடிவந்தவன் என்னைக் கட்டிக்கொள்வான் என எதிர்பார்த்தேன். ஆனால் அவனோ, அருகில் வந்ததும் நின்றுவிட்டான். நின்றதோடு மட்டுமில்லாமல் என் வலது கையையே பார்த்துக்கொண்டிருந்தான். அப்படி என்ன நான் கையில் வைத்திருக்கிறேன் என எனக்கே யோசனை தோன்ற என் வலது கையைப் பார்த்தேன். என் வலது கையில் என் பெல்ட் மட்டும் இருந்தது. "இதையா ஆச்சரியமாகப் பார்க்கிறான்?" என்றெண்ணி "வேணுமா?" என்று அவனைப் பார்த்தவாறே கையில் இருந்த பெல்ட்டை அவன் கைகளுக்கு அருகில் கொண்டு சென்றேன்.