இடுகைகள்

மழைக்கால ஞாபகங்கள்

மழைக்கால ஞாபகங்கள்: நனைக்கக் காத்திருந்தது மழை! நனையச் சொன்னது மனது! உதடு உணரும்முன் உதிர்ந்தன வார்த்தைகள், "அம்மா! மழை வருது! மாடிக்கு போய் துணிய எடுத்துட்டு வந்துடறேன்!" என்று உயிர் கரைக்கும் மழையோடு உறவாடித் திரிந்தது உடல்....! உள்ளம் மகிழ்வித்த மழை ஊர் தாண்டும் போது, உதடுகள் உளறியது "ச்சே! இன்னும் கொஞ்ச நேரம் பெய்திருக்க கூடாதா!" மழை நின்ற பின் தான் மண்டையில் உறைத்தது, இல்லாத துணியை எடுப்பதற்காக, மாடிக்கு வந்திருப்பது! தயங்கி தயங்கி கீழிறங்கி வந்தபோது, தயாராக நின்றிருந்தார் அம்மா கேள்வி கேட்க! "இன்னிக்கி நான் துணி துவைக்கலையே! எந்த துணிய எடுத்துட்டு இப்படி நனைஞ்சு வர்ற?" அசடு வழிய சிரித்துக்கொண்டு அறிவில்லாமல் பொய்சொன்னேன், "துணி காய வச்சுருக்கிங்களோனு நெனச்சு பார்க்க போனேன் அம்மா" சிரித்திக்கொண்டே வந்த அம்மாவிடம் சிக்கிக்கொண்டன என் காதுகள்! "இன்னொரு தடவை பொய் சொல்லுவ?" என்று இறுக்கினார் என் காதுகளை! வலியைப் பார்த்ததும் வந்தன வார்த்தைகள், "இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் அம்மா!" என்று இப...

இளையராஜா பாடல்

எங்கேயோ ஒலிக்கும் இளையராஜா பாடல்  தருகிறது, இங்கே இல்லாத அம்மாவின் அரவணைப்பை.....! -செல்லா 

பாவம் இந்த மக்கள்

படம்

என் காதல்

இப்போதே என்னை முழுதும் காதலித்துவிடாதே. திருமணத்திற்குப் பின் காதலிக்க கொஞ்சம் மிச்சம் வை உன் காதலை, என்கிறாய்...! அடி பெண்ணே...! திருமணத்திற்குப் பின் தானே உன்னை காதலிக்கவே ஆரம்பிக்கப் போகிறேன்...! -செல்லா

உன் பெயர்

என் டைரி செய்யும் அட்டூழியத்தைப் பார்.....! எல்லா பக்கத்திலும் உன் பெயரையே  எழுதச் சொல்லி  அடம்பிடிக்கிறது.....! -செல்லா

உன்னைப்போல் ஒருவன்

தியாகராய நகரின் பரபப்பான வீதிகளைப் பற்றித் தெரிந்தவர்கள், ஞாயிற்று கிழமை பொழுதை அங்கு கழிக்க விரும்ப மாட்டார்கள். அளவு கடந்த கூட்டமும், வாகன இரைச்சலும் மண்டிக்கிடக்கின்ற அந்த தெருக்களில், தண்ணீராய் பணத்தை செலவழிப்பவர்கள் மட்டுமே ராஜ போகம் பெறுகிறார்கள். பலரின் நிலைமை, மிட்டாய் கடையை வேடிக்கை பார்க்கும் குழந்தை போல தான். அது சரி. இப்போது எதற்கு இந்த தேவையில்லாத விமர்சனம்? நான் சொல்ல வந்த விஷயமே வேறு. சமீபத்தில் திருமணமான, என் சகோதரியை (பெரியம்மா மகள்) காண தியாகராய நகர் செல்ல வேண்டி இருந்தது. பார்த்து விட்டு வரும் வழியில், ஒரு நபரை சந்திக்க நேரிட்டது. என்னுள் ஒரு புது மாற்றத்தை ஏற்படுத்தியவர் இவர். பெயர் வெளியிட விரும்பாத இந்த நண்பர், (நாம் குமார் என்று வைத்துகொள்வோமே) என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் சற்றே ஆச்சர்யத்தையும், பெருமளவு மாற்றத்தையும் என்னிடம் ஏற்படுத்தியது. மகிழ்ச்சியாக பேசிய இவரின் வாழ்க்கை, மகிழ்ச்சியாக இல்லை. குமார் சிறுவயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர். இதனால், இவரது கால்கள் தன் செயல்பாட்டை இழந்தன. வேலை பறி போனாலே வாழ்வு முடிந்ததாக நினைக்கும் பலர் மத்தியில், தன...

மனிதநேயம்

பணத்தால் சிதறடிக்கப்பட்ட மனிதனின் மனக்கண்ணாடி......! -செல்லா