மழைக்கால ஞாபகங்கள்
மழைக்கால ஞாபகங்கள்:
நனைக்கக் காத்திருந்தது மழை!
நனையச் சொன்னது மனது!
உதடு உணரும்முன்
உதிர்ந்தன வார்த்தைகள்,
"அம்மா! மழை வருது! மாடிக்கு போய் துணிய எடுத்துட்டு வந்துடறேன்!" என்று
உயிர் கரைக்கும் மழையோடு
உறவாடித் திரிந்தது உடல்....!
உள்ளம் மகிழ்வித்த மழை ஊர் தாண்டும் போது,
உதடுகள் உளறியது
"ச்சே! இன்னும் கொஞ்ச நேரம் பெய்திருக்க கூடாதா!"
மழை நின்ற பின் தான் மண்டையில் உறைத்தது,
இல்லாத துணியை எடுப்பதற்காக, மாடிக்கு வந்திருப்பது!
தயங்கி தயங்கி கீழிறங்கி வந்தபோது,
தயாராக நின்றிருந்தார் அம்மா கேள்வி கேட்க!
"இன்னிக்கி நான் துணி துவைக்கலையே!
எந்த துணிய எடுத்துட்டு இப்படி நனைஞ்சு வர்ற?"
அசடு வழிய சிரித்துக்கொண்டு
அறிவில்லாமல் பொய்சொன்னேன்,
"துணி காய வச்சுருக்கிங்களோனு நெனச்சு பார்க்க போனேன் அம்மா"
சிரித்திக்கொண்டே வந்த அம்மாவிடம்
சிக்கிக்கொண்டன என் காதுகள்!
"இன்னொரு தடவை பொய் சொல்லுவ?" என்று
இறுக்கினார் என் காதுகளை!
வலியைப் பார்த்ததும் வந்தன வார்த்தைகள்,
"இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் அம்மா!" என்று
இப்போதும் இனிக்கிறது இந்த நினைவுகள்,
எப்போதாவது மழை பெய்யும் போது!
-செல்லா
நனைக்கக் காத்திருந்தது மழை!
நனையச் சொன்னது மனது!
உதடு உணரும்முன்
உதிர்ந்தன வார்த்தைகள்,
"அம்மா! மழை வருது! மாடிக்கு போய் துணிய எடுத்துட்டு வந்துடறேன்!" என்று
உயிர் கரைக்கும் மழையோடு
உறவாடித் திரிந்தது உடல்....!
உள்ளம் மகிழ்வித்த மழை ஊர் தாண்டும் போது,
உதடுகள் உளறியது
"ச்சே! இன்னும் கொஞ்ச நேரம் பெய்திருக்க கூடாதா!"
மழை நின்ற பின் தான் மண்டையில் உறைத்தது,
இல்லாத துணியை எடுப்பதற்காக, மாடிக்கு வந்திருப்பது!
தயங்கி தயங்கி கீழிறங்கி வந்தபோது,
தயாராக நின்றிருந்தார் அம்மா கேள்வி கேட்க!
"இன்னிக்கி நான் துணி துவைக்கலையே!
எந்த துணிய எடுத்துட்டு இப்படி நனைஞ்சு வர்ற?"
அசடு வழிய சிரித்துக்கொண்டு
அறிவில்லாமல் பொய்சொன்னேன்,
"துணி காய வச்சுருக்கிங்களோனு நெனச்சு பார்க்க போனேன் அம்மா"
சிரித்திக்கொண்டே வந்த அம்மாவிடம்
சிக்கிக்கொண்டன என் காதுகள்!
"இன்னொரு தடவை பொய் சொல்லுவ?" என்று
இறுக்கினார் என் காதுகளை!
வலியைப் பார்த்ததும் வந்தன வார்த்தைகள்,
"இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் அம்மா!" என்று
இப்போதும் இனிக்கிறது இந்த நினைவுகள்,
எப்போதாவது மழை பெய்யும் போது!
-செல்லா
nice...
பதிலளிநீக்குநன்றி
நீக்குஅருமை! வாழ்த்துக்கள்! வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளீர்கள்! அதற்கும் வாழ்த்துக்கள்! இங்கு சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.in/2015/06/blog-post_18.html
பதிலளிநீக்குவலைச்சரத்தில் அறிமுகம் அடைந்ததை அறிந்துகொண்டேன். உங்கள் அன்புக்கும் ஊக்கத்திற்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.
நீக்குஅருமை கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்! வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோ! இங்கு சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.in/2015/06/blog-post_18.html
வலைச்சரத்தில் அறிமுகம் அடைந்ததை அறிந்துகொண்டேன். உங்கள் அன்புக்கும் ஊக்கத்திற்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.
நீக்குமழையில் நனையச் செய்த குறும்பு, கவிதையாய் - அருமை.
பதிலளிநீக்குவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.
தங்கள் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல.
நீக்குஅடை மழையில் நனைய அவிழ்கிறதா கவிதை. அருமை அருமை ! தொடர வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குதங்கள் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல.
நீக்கு