இடுகைகள்

என்ன விதி?

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் முத்தம் தராமல் இருப்பது என்ன விதி? -செல்லா

என் ஆசை

விழும் மழையெல்லாம் விழுங்கிவிடும் மண்தரையைப்போல், உன் விழிப்பார்வையெல்லாம் விழுங்கிவிட ஆசை...! -செல்லா

விழியீர்ப்பு விசை

புவியீர்ப்பு விசையின் படி, எல்லா பொருட்களும் பூமியை நோக்கி வருமாம்..! உன் விழியீர்ப்பு விசையின் படி, எல்லா இதயங்களும் உன்னை நோக்கியே வரும்..! -செல்லா

கனா வீதி

வீடு கட்டக் கொட்டியிருந்த மணலை வாரி இறைத்து விளையாடிய பொழுதுகளில் வாரி அணைத்துக் கொண்டது அந்த வீதி. விசிறியடிக்கப்பட்ட மணலையும், விழுந்து புரளும் எங்களையும்..! - செல்லா

சட்டை

எதிர்வீட்டு சுடிதார் காதலியிடம், கையசைத்துக் கவிதை பேசுகிறது, காற்றில் ஆடும் சட்டை..! -செல்லா

பாட்டியின் சமையல்

மழலைகால நினைவுகளையும் சேர்த்தே பரிமாறுகிறது, பாட்டியின் சமையல்..! -செல்லா

தண்ணீர்க்குழாய்

தாகத்தில் தவிப்பவனை எண்ணி அழுகிறது. ஒழுகும் தண்ணீர்க்குழாய்..! -செல்லா