இடுகைகள்

காதலிப்பிரவேசம்

ஒரு விடுமுறை நாளில் என் அறைக்கு வந்து என் சமையலை ருசித்துவிட்டு சிரிக்க சிரிக்க கதைபேசிவிட்டு சிறிதொரு தருணத்தில் முறைத்துவிட்டு "படம் பாக்கலாம் வா" என அருகே அமர வைத்துவிட்டு கையைக் காட்டிக்கொண்டே கண்ணயர்ந்து போனாய் என் தோளில். கண்ணிமைக்க மறந்துபோய் காதலிக்கலானேன் நான்..! -செல்லா

பிய்ந்த செருப்பு

பள்ளிக்குச் செல்கிறது குழந்தை. பரிசாய் அப்பனின் காலில் கிடக்கிறது "பிய்ந்த செருப்பு" -செல்லா

ஓர் இனிய நாளில்

முன்பின் அறியா முதியவரின் சிரிப்பும், "மிச்சம் இந்தப்பா" என நீளும் நடத்துனரின் கைகளும், கவனமாய்த் துரத்திவந்து கத்திப் போகும் "சைட் ஸ்டாண்ட்" களும் வாரி இறைத்துப் போகிறது, சில தூசிகளையும் பல நல்லுள்ளங்களையும்..! -செல்லா

வாழ்க்கை

வெறுத்துவிட்டு ஓடத்துவங்கும் நாட்களில், முன்னே வந்து பழித்துக் காட்டுகிறது வாழ்க்கை..! "என்னை விட்டு எங்கே செல்வாய்" என..! - செல்லா

கவிதைப் படையெடுப்பு

மௌனத்தின் உறக்கங்கள் கிழித்து மற்போர் புரியும் அந்த மூன்றாம் ஜாமத்துக் கவிதைகள், வென்று குவிக்கின்றன எண்ணிலடங்கா உள்ளங்களை..! -செல்லா

பொறு மனமே

புல்மேல் பனியாய் பொறு மனமே. புவி சேர்வதோ விண் போவதோ நிச்சயிக்கட்டும் காலம்..! - செல்லா

தேவதையின் வரவு..!

மீண்டும் என் வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டது, ஒரு தேவதையின் வரவால்..! -செல்லா