மழைக்கால ஞாபகங்கள்: நனைக்கக் காத்திருந்தது மழை! நனையச் சொன்னது மனது! உதடு உணரும்முன் உதிர்ந்தன வார்த்தைகள், "அம்மா! மழை வருது! மாடிக்கு போய் துணிய எடுத்துட்டு வந்துடறேன்!" என்று உயிர் கரைக்கும் மழையோடு உறவாடித் திரிந்தது உடல்....! உள்ளம் மகிழ்வித்த மழை ஊர் தாண்டும் போது, உதடுகள் உளறியது "ச்சே! இன்னும் கொஞ்ச நேரம் பெய்திருக்க கூடாதா!" மழை நின்ற பின் தான் மண்டையில் உறைத்தது, இல்லாத துணியை எடுப்பதற்காக, மாடிக்கு வந்திருப்பது! தயங்கி தயங்கி கீழிறங்கி வந்தபோது, தயாராக நின்றிருந்தார் அம்மா கேள்வி கேட்க! "இன்னிக்கி நான் துணி துவைக்கலையே! எந்த துணிய எடுத்துட்டு இப்படி நனைஞ்சு வர்ற?" அசடு வழிய சிரித்துக்கொண்டு அறிவில்லாமல் பொய்சொன்னேன், "துணி காய வச்சுருக்கிங்களோனு நெனச்சு பார்க்க போனேன் அம்மா" சிரித்திக்கொண்டே வந்த அம்மாவிடம் சிக்கிக்கொண்டன என் காதுகள்! "இன்னொரு தடவை பொய் சொல்லுவ?" என்று இறுக்கினார் என் காதுகளை! வலியைப் பார்த்ததும் வந்தன வார்த்தைகள், "இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் அம்மா!" என்று இப...
வழக்கமான மாலைப்பொழுது. அலுவலகம் முடிந்து எப்போதும் போல் வீட்டிற்கு வந்து உடைகளை மாற்ற எண்ணினேன். நான் வீட்டிற்கு வரவும், அகில் எழுந்திருக்கவும் சரியாக இருந்தது. என்னைக் காட்டவேண்டி அகிலைப் படுக்கையிலிருந்து தூக்கிக்கொண்டு வந்தார் விக்கி. காலையில் மனமில்லாமல் அலுவலகத்திற்கு என்னை வழியனுப்பியவன், மாலை நான் வீட்டிற்கு வந்ததும் மிகவும் குஷியாகிவிட்டான். விக்கியின் கைகளில் இருந்த அவன், என்னைப் பார்த்ததும் உடனே இறங்கிக்கொண்டு, வாய் நிறைய புன்னகையுடன் தன் கை இரண்டையும் நீட்டியவாறே குதித்துக் குதித்து என்னைப்பிடிக்க ஓடிவந்தான். ஆசையாய் ஓடிவந்தவன் என்னைக் கட்டிக்கொள்வான் என எதிர்பார்த்தேன். ஆனால் அவனோ, அருகில் வந்ததும் நின்றுவிட்டான். நின்றதோடு மட்டுமில்லாமல் என் வலது கையையே பார்த்துக்கொண்டிருந்தான். அப்படி என்ன நான் கையில் வைத்திருக்கிறேன் என எனக்கே யோசனை தோன்ற என் வலது கையைப் பார்த்தேன். என் வலது கையில் என் பெல்ட் மட்டும் இருந்தது. "இதையா ஆச்சரியமாகப் பார்க்கிறான்?" என்றெண்ணி "வேணுமா?" என்று அவனைப் பார்த்தவாறே கையில் இருந்த பெல்ட்டை அவன் கைகளுக்கு அருகில் கொண்டு சென்றேன். ...
கருத்துகள்
கருத்துரையிடுக