இடுகைகள்

உன்மீதான அந்தக் 'காதல்'..!

யாரோ எப்போதோ அனுப்பும் ஒரு குறுஞ்செய்தி தூண்டிப்போகும் உன் நினைவுகளையும், விளைவாய் விழி தேடி அலையும் உன் இறந்தகால உரையாடல்களையும், மீண்டும் நேசித்து, மீண்டும் சுவாசித்துவிட்டு மறுமுறை என்னைக் கடந்து போகிறது, உன்மீதான அந்தக் ' காதல் '..! -செல்லா

அவள் உறக்கம்

அந்தத் தொலைபேசி அழைப்பின் ஒரு முனையில் பேசிக்கொண்டே அவள் தூங்கிவிடுகிறாள்! மறுமுனையில் அமைதியாய்க் காதலிக்கத் துவங்குகிறேன், அவளையும் அழகிய அவள் உறக்கத்தையும்...! ❤❤❤❤ -செல்லா

தேவதைகள்

வானில் பறக்காமல் ஸ்கூட்டியில் பறக்கும் தேவதைகளும் உண்டு...! ❤❤❤❤ - செல்லா

ஜூனியர் அலப்பறைகள்

நான்: பாப்பா என்னமா பண்ணிக்கிட்டு இருக்க? என் தங்கச்சி பொண்ணு: வீடு கட்டிக்கிட்டு இருக்கேன். நான்: அதென்ன வீட்டுக்குள்ள ஏதோ நீளமா இருக்கு? என் தங்கச்சி பொண்ணு: அது HIT. வீட்டுக்குள்ள கப்பான் (கரப்பான்) பூச்சி வந்தா என்ன செய்யுறது? #ஜூனியர்_அலப்பறைகள்

சிலரின் ரகசியங்கள்

தலையணைகளிலும், கழிவறைகளிலும் புதைக்கப்படுகின்றன சில ஆண்களின் ரகசியங்கள்..! -செல்லா

குழந்தைகள்

கவலைப்படுவதற்கான காரணங்கள் மட்டுமே பெரியவர்கள் தெரிந்து வைத்திருக்க, சிரிப்பதற்கான காரணங்களைக் குழந்தைகள் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். 😊😊😊 -செல்லா

பதியப்படாத பதிவுகள்

எங்கோ ஓர் மூலையில் உறங்கிக்கொண்டிருக்கிறது என் காதல். எழுதிவிட்டு பதியப்படாத பதிவுகளாய்...! -செல்லா