மழைக்கால ஞாபகங்கள்: நனைக்கக் காத்திருந்தது மழை! நனையச் சொன்னது மனது! உதடு உணரும்முன் உதிர்ந்தன வார்த்தைகள், "அம்மா! மழை வருது! மாடிக்கு போய் துணிய எடுத்துட்டு வந்துடறேன்!" என்று உயிர் கரைக்கும் மழையோடு உறவாடித் திரிந்தது உடல்....! உள்ளம் மகிழ்வித்த மழை ஊர் தாண்டும் போது, உதடுகள் உளறியது "ச்சே! இன்னும் கொஞ்ச நேரம் பெய்திருக்க கூடாதா!" மழை நின்ற பின் தான் மண்டையில் உறைத்தது, இல்லாத துணியை எடுப்பதற்காக, மாடிக்கு வந்திருப்பது! தயங்கி தயங்கி கீழிறங்கி வந்தபோது, தயாராக நின்றிருந்தார் அம்மா கேள்வி கேட்க! "இன்னிக்கி நான் துணி துவைக்கலையே! எந்த துணிய எடுத்துட்டு இப்படி நனைஞ்சு வர்ற?" அசடு வழிய சிரித்துக்கொண்டு அறிவில்லாமல் பொய்சொன்னேன், "துணி காய வச்சுருக்கிங்களோனு நெனச்சு பார்க்க போனேன் அம்மா" சிரித்திக்கொண்டே வந்த அம்மாவிடம் சிக்கிக்கொண்டன என் காதுகள்! "இன்னொரு தடவை பொய் சொல்லுவ?" என்று இறுக்கினார் என் காதுகளை! வலியைப் பார்த்ததும் வந்தன வார்த்தைகள், "இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் அம்மா!" என்று இப
இன்று தான் கேட்கிறேன் அந்த வார்த்தையை அந்த முதல் வார்த்தையை நீ என்னிடம் சொல்ல எண்ணிய அந்த முதல் வார்த்தையை பட்டுக்குரலெடுத்து பளிங்குபோல் மிருதுவாக அலைபேசியின் வாயருகில் அழகான உன் பூவிதழ்பதித்து அடுக்கடுக்காய் எழுத்துகளை அச்சுப்பிசகாமல் கோர்த்துவைத்து மெல்லிய சிறு இடைவெளியில் மெதுவாக, மென்மையாக, "மாமா" என நீ அழைத்தது. இது தானா! இது தானா அந்த நிமிடம்! எத்தனை நாள், எத்தனை நாள் ஏங்கியிருப்பேன் இந்த வார்த்தையைக் கேட்க..! எத்தனை தடவை திண்டாடியிருப்பேன் உன்னைப் பேசவைக்க..! எத்தனை நிமிடங்கள் காத்திருந்திருப்பேன் உன் குரலைக் கேட்டிருக்க..! எத்தனை முறை போராடித் தோற்றிருப்பேன் உன்னை, என் பெயரைச் சொல்லவைக்க..! ஆனால், இன்று, யாருமே சொல்லித்தராமல், எந்த போராட்டமும் இல்லாமல் நீ அழைக்கிறாய் நீயாக அழைக்கிறாய் என்னை..! முதல் முறையாக..! ஆனால் முழுவதுமாக..! "ஆங்" "மாமா" "மாமா" "மம்மா" "மாமா" "மாமா.. அக்கு" "அம்மா... மாமா" "மாமாகு" அந்தக் கீச்சுக்குரலுக்குள் ஒளிந்திருந்து வெளிவரும் அத்தனை வார்த்தைக்குள்ளும்
1. கிரிக்கெட் மேட்ச் இரத்தத்தை மட்டும் உடல் முழுவதும் பரப்பிக்கொண்டிருந்த என் இதயம், காதலையும் சேர்த்து பரப்பத்தொடங்கியது. உன்னைப் பார்த்தபின்..! தன்னால் எவ்வளவு கோபத்தைக் காட்டமுடியுமோ அவ்வளவு கோபத்தையும் காட்டிக்கொண்டிருந்தது சூரியன். வானத்தில் இருந்து வெப்பம் மழையைப் பொழிவதுபோல் இருந்தது. கண்கள் பார்க்கும் திசையெல்லாம் கானல் நீரே நிரம்பியிருந்தது. நேரம் மதியம் 1 மணி இருக்கலாம். அங்கிருந்த அத்தனை முகங்களிலும் வியர்வைத்துளிகள் கூடாரமிட்டிருந்தன. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்த அங்கிருந்த யாருக்கும் நேரமில்லை. எல்லோர் முகத்திலும் வியர்வையை மீறிய ஒரு வித பதற்றம், ஒரு எதிர்பார்ப்பு. அங்கிருந்த அத்தனை கண்களும் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தன. என்னுடைய thigh pad ஐக் கட்டிக்கொண்டு, களம்புகத் தயாரானேன். "டே மாமா! லாஸ்ட் ஓவர் டா! 6 ரன் எடுக்கனும்டா. பத்தாததுக்கு பௌலிங் போடறது Mech தினேஷ் டா. நம்ம ஜெயிக்கிறதே இப்போ உன் கையில தாண்டா இருக்கு." காலில் விழாத குறையாக கதறிக்கொண்டிருந்தான் ராகேஷ். Mech Department தினேஷ். அனைவரும் பயப்படுவதற்கு முக்கியமான காரணம் அவன்தான். அ
இன்று வந்து விட்டது... தொடர வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஹா ஹா ஹா. அன்புக்கு நன்றிங்க.... :-)
நீக்கு