இடுகைகள்

காதல் நிச்சயிக்கப்பட்டுவிட்டது

படம்
இன்றும் நினைவிருக்கிறது, பெண்பார்க்கும் படலத்தில் என்னிடம் தனியே பேச, என் தந்தையிடம் அனுமதி வாங்கியது...! பெரியோர்கள் சம்மதத்துடன், பேசவந்தாய் என்னிடம் முதன்முதலில்...! தனியறை. தொலைவில் உறவுகள். அமைதியான சூழல். அருகில் நீ. எவ்வளவோ சொல்லியும் கேளாமல் எகிறத்தொடங்கியது இதயத்துடிப்பு உன் அருகாமை கண்டு...! "உங்க பேர் என்ன?" "என்ன படிச்சிருக்கிங்க?" "என்னென்னன புடிக்கும் உங்களுக்கு?" "என்னைப் பிடிச்சிருக்கா?" எத்தனை கேள்விகள் எழுதிவைத்தேன் மனதில்..! எல்லாம் மறந்தது இன்று உன் அருகில்..! பாழாய்ப்போன உதடுகள், உன்னைப் பார்த்ததும்தானா மூடிக்கொள்ளவேண்டும்...? தடுமாறி நின்றபோதுதான் தெரிந்தது, என் தவிப்புகள் உன்னால் ரசிக்கப்படுகிறது என்று...! பத்துநாளாய் புகைப்படத்தில் நான் ரசித்த கண்கள், பக்கத்தில் நின்று என்னை ரசிக்கும்போது, தடுமாறித்தான் போனது, என் தைரியமான மனமும்...! ஆசையோ கட்டிக்கொள்ளச் சொல்ல, நாணமோ எட்டித் தள்ள, வேண்டாம் என்று சொல்லியும், முகத்தில் வெட்கமாய் பூத்துவிட்டிருந்தது காதல்...! தவிக்க விட்டது போதும் என்றெண்ணியோ, தன்னால் கேட்டாய், "எனக...

வெட்கம்

படம்

காதலின் அடையாளம்

படம்

நவீன் - பிரமிளா - சில நிமிடங்கள்

"நவீன்ன்ன்" - பிரமிளாவின் அலறல் அந்த சிறிய பங்களாவின் அனைத்து சுவர்களிலும் பட்டு எதிரொலித்து, அவ்வளவு நேரம் அருகில் இருந்துவிட்டு அப்போது தான் தண்ணீர் வேண்டுமென்று பிரமிளா கேட்டதற்காக தண்ணீர் கொண்டுவர சமையலறைக்குள் சென்றிருந்த நவீனை அடைந்தது. இரண்டு வினாடிகளில், சமையலறையில் இருந்து, உணவருந்தும் அறை (டைனிங் ஹால்) , வாசிக்கும் அறை (ரீடிங் ஹால்) மற்றும் வரவேற்பாளர் அறையைத் (விசிட்டர் ஹால்) தாண்டி, எதிர்பட்ட அத்தனை சிறு பெரு தடைகளை (பொருட்களை) உடைத்தெறிந்துவிட்டு படுக்கை அறையை அடைந்தான் நவீன். உடலில் ஏற்பட்டிருந்த வலி கண்ணில் தெரிய, சாட்சியாய் சிறுதுளி நீரும் அரும்ப, 'அருகில் வந்துவிடு. உன் அருகாமை இப்போது எனக்குத் தேவை' என்பது போல் அமர்ந்திருந்தாள் நவீனின் அன்பு மனைவி பிரமிளா. வெளியில் சொல்லாவிட்டாலும் விழி கூறியது நவீன் படும் அவஸ்தையை. "நவீன். பிரமிக்கு வலி வந்துருச்சுப்பா. சீக்கிரம் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்பா" - என்றவாறே அடுத்து செய்ய வேண்டியதை நினைவூட்டினாள் ராஜம். பல நூறு மைல்கள், மற்றும் சில நாடுகள் தாண்டி வந்து நியூ யார்க் மாகணத்தில் வந்து குடி...

தேவதை

படம்

களிமண் வீடு

படம்

இம்புட்டு அழகாவாடி நீ இருப்ப

படம்