1. கிரிக்கெட் மேட்ச் இரத்தத்தை மட்டும் உடல் முழுவதும் பரப்பிக்கொண்டிருந்த என் இதயம், காதலையும் சேர்த்து பரப்பத்தொடங்கியது. உன்னைப் பார்த்தபின்..! தன்னால் எவ்வளவு கோபத்தைக் காட்டமுடியுமோ அவ்வளவு கோபத்தையும் காட்டிக்கொண்டிருந்தது சூரியன். வானத்தில் இருந்து வெப்பம் மழையைப் பொழிவதுபோல் இருந்தது. கண்கள் பார்க்கும் திசையெல்லாம் கானல் நீரே நிரம்பியிருந்தது. நேரம் மதியம் 1 மணி இருக்கலாம். அங்கிருந்த அத்தனை முகங்களிலும் வியர்வைத்துளிகள் கூடாரமிட்டிருந்தன. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்த அங்கிருந்த யாருக்கும் நேரமில்லை. எல்லோர் முகத்திலும் வியர்வையை மீறிய ஒரு வித பதற்றம், ஒரு எதிர்பார்ப்பு. அங்கிருந்த அத்தனை கண்களும் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தன. என்னுடைய thigh pad ஐக் கட்டிக்கொண்டு, களம்புகத் தயாரானேன். "டே மாமா! லாஸ்ட் ஓவர் டா! 6 ரன் எடுக்கனும்டா. பத்தாததுக்கு பௌலிங் போடறது Mech தினேஷ் டா. நம்ம ஜெயிக்கிறதே இப்போ உன் கையில தாண்டா இருக்கு." காலில் விழாத குறையாக கதறிக்கொண்டிருந்தான் ராகேஷ். Mech Department தினேஷ். அனைவரும் பயப்படுவதற்கு முக்கியமான காரணம் அவன்தான். அ...