மழைக்கால ஞாபகங்கள்: நனைக்கக் காத்திருந்தது மழை! நனையச் சொன்னது மனது! உதடு உணரும்முன் உதிர்ந்தன வார்த்தைகள், "அம்மா! மழை வருது! மாடிக்கு போய் துணிய எடுத்துட்டு வந்துடறேன்!" என்று உயிர் கரைக்கும் மழையோடு உறவாடித் திரிந்தது உடல்....! உள்ளம் மகிழ்வித்த மழை ஊர் தாண்டும் போது, உதடுகள் உளறியது "ச்சே! இன்னும் கொஞ்ச நேரம் பெய்திருக்க கூடாதா!" மழை நின்ற பின் தான் மண்டையில் உறைத்தது, இல்லாத துணியை எடுப்பதற்காக, மாடிக்கு வந்திருப்பது! தயங்கி தயங்கி கீழிறங்கி வந்தபோது, தயாராக நின்றிருந்தார் அம்மா கேள்வி கேட்க! "இன்னிக்கி நான் துணி துவைக்கலையே! எந்த துணிய எடுத்துட்டு இப்படி நனைஞ்சு வர்ற?" அசடு வழிய சிரித்துக்கொண்டு அறிவில்லாமல் பொய்சொன்னேன், "துணி காய வச்சுருக்கிங்களோனு நெனச்சு பார்க்க போனேன் அம்மா" சிரித்திக்கொண்டே வந்த அம்மாவிடம் சிக்கிக்கொண்டன என் காதுகள்! "இன்னொரு தடவை பொய் சொல்லுவ?" என்று இறுக்கினார் என் காதுகளை! வலியைப் பார்த்ததும் வந்தன வார்த்தைகள், "இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் அம்மா!" என்று இப
கருத்துகள்
கருத்துரையிடுக