இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நவீன் - பிரமிளா - சில நிமிடங்கள்

"நவீன்ன்ன்" - பிரமிளாவின் அலறல் அந்த சிறிய பங்களாவின் அனைத்து சுவர்களிலும் பட்டு எதிரொலித்து, அவ்வளவு நேரம் அருகில் இருந்துவிட்டு அப்போது தான் தண்ணீர் வேண்டுமென்று பிரமிளா கேட்டதற்காக தண்ணீர் கொண்டுவர சமையலறைக்குள் சென்றிருந்த நவீனை அடைந்தது. இரண்டு வினாடிகளில், சமையலறையில் இருந்து, உணவருந்தும் அறை (டைனிங் ஹால்) , வாசிக்கும் அறை (ரீடிங் ஹால்) மற்றும் வரவேற்பாளர் அறையைத் (விசிட்டர் ஹால்) தாண்டி, எதிர்பட்ட அத்தனை சிறு பெரு தடைகளை (பொருட்களை) உடைத்தெறிந்துவிட்டு படுக்கை அறையை அடைந்தான் நவீன். உடலில் ஏற்பட்டிருந்த வலி கண்ணில் தெரிய, சாட்சியாய் சிறுதுளி நீரும் அரும்ப, 'அருகில் வந்துவிடு. உன் அருகாமை இப்போது எனக்குத் தேவை' என்பது போல் அமர்ந்திருந்தாள் நவீனின் அன்பு மனைவி பிரமிளா. வெளியில் சொல்லாவிட்டாலும் விழி கூறியது நவீன் படும் அவஸ்தையை. "நவீன். பிரமிக்கு வலி வந்துருச்சுப்பா. சீக்கிரம் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்பா" - என்றவாறே அடுத்து செய்ய வேண்டியதை நினைவூட்டினாள் ராஜம். பல நூறு மைல்கள், மற்றும் சில நாடுகள் தாண்டி வந்து நியூ யார்க் மாகணத்தில் வந்து குடி

தேவதை

படம்

களிமண் வீடு

படம்

இம்புட்டு அழகாவாடி நீ இருப்ப

படம்

பொன்னம்மாள் பாட்டி

"அய்யனாரப்பா! என் புள்ளைய நீதான் எப்பவும் பாத்துக்கணும். அவனுக்கு எந்த ஒரு நோய் நொடியும் வந்துராம, நல்லபடியா இருக்கணும். அவனுக்கு யாராலையும் எந்த தொல்லையும் வந்துரக் கூடாது. முக்கியமா, அந்த மூணாவது தெருல இருக்குறாளே அந்த முண்டக்கண்ணி, அவ என் மவன் மேல எந்தக் கண்ணும் வச்சுடக்கூடது. கடன்காரி. அவ முழியே சரியில்ல. வேற எந்த ஒரு குத்தம் குறை பண்ணியிருந்தாலும் எம்மகன மன்னிச்சு அவன நல்லபடியா பார்த்துக்கப்பா. அவன் நல்லபடியா வளந்து, பெரிய ஆளாகி, நாலு பேரு மெச்சுற மாதிரி பெரிய உத்தியோகஸ்தனா வரணும். பெரிய கொழாய் சட்டையெல்லாம் மாட்டிக்கிட்டு தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கலீசுல பேசணும். இதையெல்லாம் இந்த சிறுக்கி பார்த்துப்புட்டு தான் கண்ண மூடனும். இதெல்லாம் நீதானப்பா நடத்தி வைக்கணும். இதெல்லாம் நடந்துட்டா, வருஷந்தவராம உன் எல்லைக்கு வந்து, கெடா வெட்டி பொங்க வைக்கிறேன்யா சாமி. நீதான் பாத்துக்கணும். நீதான் பாத்துக்கணும்". அய்யனார் காலடியில் இருந்த விபூதியை கை நிறைய எடுத்து நெற்றி முழுக்க இட்டுக்கொண்டாள் வேலம்மாள். தன் மனதில் இருந்த எல்லா வேண்டுதலையும், சரியாகச் சொன்னால் ஒரே ஒரு வேண்டுதலை அய்யனாரின் எ

சேர்ந்திருக்கும் தருணங்கள்

படம்

மின்மினிப்பூச்சி

படம்

முதல் முத்தம்

படம்

கண்ணு தெரியலம்மா.... :(

ஏதோ ஒரு நடுநிசி இரவில், ஒரு 8 வயது சிறுவன். மகன்: (ஒரு வித பதற்றமான லேசான அழுகையுடன்) அம்மா, அம்மா, எனக்கு கண்ணு தெரியாம போச்சும்மா, அம்மா கண்ணு தெரியாம போச்சுமா. அம்மா: (பதறியடித்தவாறே) என்னடா சொல்லுற? என்ன ஆச்சு? மகன்: ஆமாம்மா, எனக்கு எதுவுமே தெரியல. நீ எங்க இருக்கணு தெரியல. அப்பா, பாப்பாவல்லாம் (தங்கை) தெரியல. அங்க பாரும்மா, நைட்ல நம்ம போட்டு வச்சுருப்போமே ஒரு விடி லைட் (இரவு நேர சிறிய பல்பு) அது கூட தெரியலம்மா. நெஜமாவே எனக்கு கண்ணு தெரியலம்மா. எல்லாமே இருட்டா இருக்குதும்மா.. ஹீஎஈஈஈ...... அம்மா: டே கிறுக்கா. கரண்ட் போயிருச்சுடா. ஏதாவது உளராம பேசாம படுத்து தூங்கு. என் தூக்கத்த வேற கெடுத்துகிட்டு. இதுல அழுகை வேற. மகன்: (ஒரு பெருமூச்சுடன்) கரண்ட்டு போச்சா, நான் கூட எனக்கு கண்ணு தெரியலையோனு நெனச்சேன். குறிப்பு: அந்த கிறுக்கன் நான்தான்.

நம் திருமணம்

படம்

மழையின் குறும்பு

என்னோடு சேர்ந்து குறும்பு செய்துவிட்டு என்னோடு சேர்ந்து குதூகலித்துவிட்டு என்னை முழுக்க நனைத்துவிட்டு எனக்கு சந்தோஷத்தை வாரிக்கொடுத்துவிட்டு இப்போது என் அன்னை சேலைத்தலைப்பில் எனக்குமுன் சென்றமர்ந்துவிட்டாயே மழையே உனக்குத்தான் எவ்வளவு குறும்பு..! -செல்லா

அம்மாவின் சமையல்

படம்

நீயில்லை

படம்

நம் காதல்

படம்

கசங்கல்கள்

படம்

உன் கண்ணாடி

படம்

சாலை பராமரிப்பு

படம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 3

3. சிறு முதல் சிரிப்பு ' ஏண்டி இப்படி செஞ்ச ?' என்று நான் கோபப்படும் முன் , ' என்ன மன்னிச்சிடுடா ' என்று கட்டிக் கொள்கிறாய் . அப்புறம் , கோபம் எப்படி வரும் ? காதல் தான் வரும் . நாளை அந்த புத்தகத்தை தருவதாய்ச் சொல்லி , எப்படியோ சமாளித்து அபர்ணாவை அன்று அனுப்பி வைத்துவிட்டேன் . பள்ளிகூட நண்பன் ஒருவனிடம் அந்த புத்தகம் இருப்பதை அறிந்து , அவனிடம் சென்று வாங்கி வந்தேன் அபர்ணாவிடம் கொடுப்பதற்காக . ( அது ஏன் எங்க கிளாஸ் ல ஒருத்தர் கிட்ட கூட அந்த புக் இல்லன்னு 5 நிமிடம் கழிச்சு சொல்றேன் ) அடுத்தநாள் காலை , எங்கள் கல்லூரியில் ... " தம்பி வேலு . அண்ணி எங்கப்பா ?" - நான் அபர்ணாவின் சக வகுப்பு மாணவனான , முத்து வேல் , என்கிற வேலுவை விசாரித்துக் கொண்டிருந்தேன் . அபர்ணாவைப் பற்றி நான் அறிந்துகொள்ள எனக்கு இருக்கும் ஒரே ஒரு ஆள் இவன்தான் . ( பையன் ரொம்ப நல்லவன் . இல்லனா , என்ன பார்த்து பயப்புடுவானா ?) பதில் ஏதும் சொல்லாமல் , புதிதாய் யாரையோ பார்ப்பது போல் என்னைப் பார்த்த

கோபம் எப்படி வரும்?

படம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 2

2. தேடி வந்த தேவதை உன் சோம்பலோடு சேர்த்து முறித்துப் போட்டாய் , என்னுடைய பத்தொன்பது வருட பிரம்மச்சரியத்தையும் ..! அடுத்த நாள் என்ன நடந்ததுன்னு சொல்றதுக்கு முன்னாடி , ஒரு சின்ன முன்னோட்டம் . நான் , செல்வா . படிக்கிறது இன்ஜினியரிங் 2ஆம் வருடம் . ஊருல இருக்குற எல்லா அப்பா மாதிரியே, எங்க அப்பாவும் நான் ஒரு இன்ஜினியர் ஆகணும்னு சொல்லி ஒரு இன்ஜினியரிங் காலேஜுல என்னை சேர்த்து விட்டாரு. அதுவும் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் கோர்ஸ்ல. ஆனா எனக்கோ கம்ப்யூட்டரும் பிடிக்கல, இன்ஜினியரிங்கும் பிடிக்கல. என்னதான் பேக் பெஞ்ச் ஸ்டுடன்ட் ஆகுற தகுதி எனக்கு இல்லாம போயிருந்தாலும், பேக் பெஞ்ச்க்கு முன்னாடி உள்ள பெஞ்ச்ல உக்கார்ற தகுதி இருந்துச்சு. வாழ்க்கை ஏகப்பட்ட சொதப்பல்களோட போய்க்கிட்டு இருந்தது. கூட சில உருப்படாத வெட்டிப்பசங்களும் சேர்ந்து தொலைய, (அதாங்க பிரண்ட்ஸ்) வாழ்க்கை இன்னும் சூப்பரா சொதப்ப ஆரம்பிச்சது. அப்போதான் எதிர்பாராம ஒரு நாள் அவளை சந்திக்கவேண்டியதா போயிருச்சு. அந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (?) 9 மணி அளவில் , அலாரம் வைத்தது போல என் அம்மா எ