மழைக்கால ஞாபகங்கள்: நனைக்கக் காத்திருந்தது மழை! நனையச் சொன்னது மனது! உதடு உணரும்முன் உதிர்ந்தன வார்த்தைகள், "அம்மா! மழை வருது! மாடிக்கு போய் துணிய எடுத்துட்டு வந்துடறேன்!" என்று உயிர் கரைக்கும் மழையோடு உறவாடித் திரிந்தது உடல்....! உள்ளம் மகிழ்வித்த மழை ஊர் தாண்டும் போது, உதடுகள் உளறியது "ச்சே! இன்னும் கொஞ்ச நேரம் பெய்திருக்க கூடாதா!" மழை நின்ற பின் தான் மண்டையில் உறைத்தது, இல்லாத துணியை எடுப்பதற்காக, மாடிக்கு வந்திருப்பது! தயங்கி தயங்கி கீழிறங்கி வந்தபோது, தயாராக நின்றிருந்தார் அம்மா கேள்வி கேட்க! "இன்னிக்கி நான் துணி துவைக்கலையே! எந்த துணிய எடுத்துட்டு இப்படி நனைஞ்சு வர்ற?" அசடு வழிய சிரித்துக்கொண்டு அறிவில்லாமல் பொய்சொன்னேன், "துணி காய வச்சுருக்கிங்களோனு நெனச்சு பார்க்க போனேன் அம்மா" சிரித்திக்கொண்டே வந்த அம்மாவிடம் சிக்கிக்கொண்டன என் காதுகள்! "இன்னொரு தடவை பொய் சொல்லுவ?" என்று இறுக்கினார் என் காதுகளை! வலியைப் பார்த்ததும் வந்தன வார்த்தைகள், "இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் அம்மா!" என்று இப...
வாருங்கள்! சிறிது பாதை மாறிப் போகலாம்! தார்ச்சாலைகளை விட்டுவிட்டு, சிலதூரம் காடுகளுக்குள் செல்லலாம்! மண் பாதைகளையும், மலர் வாசங்களையும் கொஞ்சம் மனதோடு எடுத்து வரலாம்! நீண்ட நெடிய வனாந்தரத்திற்குள், சிறிது நடைபயணம் சென்று வரலாம்! மழை மேகங்களைத் தடுத்து நிறுத்தும் மலைகளுக்குக் கவிதைகள் சில பாடி வரலாம்! வெண்புகையாய் நம்மைச்சூழும் வெண்பனியை, விரலோடு கொஞ்சம் கொஞ்சி வரலாம்! தாய்ப்பாலாய்த் தாகம் தீர்க்கும் அருவிகளின் தாயன்பில் நன்றாய் நனைந்து வரலாம்! ஓங்கி வளர்ந்த மரங்களின் தோப்பில் கொஞ்சம் ஓய்வும் கொள்ளலாம்! தீராத நெடுவெளிகளில் காணாத உயிர்களைத் தேடித் திரியலாம்! மனிதன் தீண்டா தொலை தூரங்களைக் காலால் கொஞ்சம் அளந்து வரலாம்! விடியல் கொஞ்சம் விடைபெறும் வரை விளையாடிக் களிக்கலாம்! விளையாடிய களைப்பு தீர, மீண்டும் விடியும் வரை சிறிது விண்மீன்களின் அரவணைப்பில் உறக்கமும் கொள்ளலாம்! வாருங்கள். வாழ்வைக் கொஞ்சம் வாழலாம்..! -செல்லா
why feeling>?????? same feeling!!!!!!!
பதிலளிநீக்குcomplicated relationship .....
பதிலளிநீக்குexpressed beautifully