ஸிகார் பொக்கிஷம் - ஆகாயத்தின் சாவி..!
சமரின் பேச்சை அரசர் நம்ப ஒரு துளியும் தயாராக இல்லை. இருந்தாலும் சமர் சொல்ல ஆரம்பிச்ச விஷயம் பெரிசா இருந்ததால ஒரு கணம் அரசர் யோசிச்சாரு. மறுபடியும் ஒரு முறை சமர் கிட்ட திரும்ப கேட்டாரு, "உண்மையை சொல்லு. ஆகாயத்தின் சாவி உன்கிட்டயா இருக்கு?" அப்படின்னு. சமர், தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு, ஒரு பெருமூச்சை வாங்கிக்கிட்டு, அழுத்தம் திருத்தமா, இன்னொரு முறை சொன்னான். "ஆமா. ஆகாயத்தின் சாவி என்கிட்டே தான் இருக்கு!"ன்னு "உன்ன நான் எப்படி நம்புறது?" அப்படின்னு அரசர் கேட்க, சமர் தன் இடது கையை மூடியிருந்த சட்டை துணியை விலக்கி கையை நீட்டினான். அரசர் அவன் கையை பார்த்த போது, அவரையே அறியாம அவரோட கண் ஆச்சரியத்தில பெருசா விரிய ஆரம்பிச்சது. அதுவரை பழைய கதைகளிலும், மற்றவர்கள் வாயால சொல்லியும் கேள்விப்பட்ட அந்த விஷயத்தை நேர்ல பார்க்கும் போது, துருப அரசருக்கு ஒரு நிமிடம் அவருக்கு மூச்சே நின்னுடும் போல இருந்தது. சமர் காட்டிய இடது கையில ரொம்ப கருமையான மையால பச்சை குத்தினது மாதிரி அழுத்தமா பதிஞ்சு இருந்தது ஒரு உருவம். தலையின் இரண்டு பக்கமும் காதுகளுக்கு மேல மூணு நாலு ராட்சத