ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் முத்தம் தராமல் இருப்பது என்ன விதி? -செல்லா
வீடு கட்டக் கொட்டியிருந்த மணலை வாரி இறைத்து விளையாடிய பொழுதுகளில் வாரி அணைத்துக் கொண்டது அந்த வீதி. விசிறியடிக்கப்பட்ட மணலையும், விழுந்து புரளும் எங்களையும்..! - செல்லா
உன் வேண்டுதலுக்காகக் கொழுக்கட்டை பிடித்து பிள்ளையாருக்குப் படிக்கிறாய் ஊர்க்கோவிலில். நீ பிடித்த கொழுக்கட்டை முதலில் படைக்கப்பட வேண்டி வேண்டிக்கொள்கிறார் பிள்ளையார்..! -செல்லா
ஒரு விடுமுறை நாளில் என் அறைக்கு வந்து என் சமையலை ருசித்துவிட்டு சிரிக்க சிரிக்க கதைபேசிவிட்டு சிறிதொரு தருணத்தில் முறைத்துவிட்டு "படம் பாக்கலாம் வா" என அருகே அமர வைத்துவிட்டு கையைக் காட்டிக்கொண்டே கண்ணயர்ந்து போனாய் என் தோளில். கண்ணிமைக்க மறந்துபோய் காதலிக்கலானேன் நான்..! -செல்லா