இடுகைகள்

மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னருகே நீயிருந்தால் - பகுதி 2

2. தேடி வந்த தேவதை உன் சோம்பலோடு சேர்த்து முறித்துப் போட்டாய் , என்னுடைய பத்தொன்பது வருட பிரம்மச்சரியத்தையும் ..! அடுத்த நாள் என்ன நடந்ததுன்னு சொல்றதுக்கு முன்னாடி , ஒரு சின்ன முன்னோட்டம் . நான் , செல்வா . படிக்கிறது இன்ஜினியரிங் 2ஆம் வருடம் . ஊருல இருக்குற எல்லா அப்பா மாதிரியே, எங்க அப்பாவும் நான் ஒரு இன்ஜினியர் ஆகணும்னு சொல்லி ஒரு இன்ஜினியரிங் காலேஜுல என்னை சேர்த்து விட்டாரு. அதுவும் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் கோர்ஸ்ல. ஆனா எனக்கோ கம்ப்யூட்டரும் பிடிக்கல, இன்ஜினியரிங்கும் பிடிக்கல. என்னதான் பேக் பெஞ்ச் ஸ்டுடன்ட் ஆகுற தகுதி எனக்கு இல்லாம போயிருந்தாலும், பேக் பெஞ்ச்க்கு முன்னாடி உள்ள பெஞ்ச்ல உக்கார்ற தகுதி இருந்துச்சு. வாழ்க்கை ஏகப்பட்ட சொதப்பல்களோட போய்க்கிட்டு இருந்தது. கூட சில உருப்படாத வெட்டிப்பசங்களும் சேர்ந்து தொலைய, (அதாங்க பிரண்ட்ஸ்) வாழ்க்கை இன்னும் சூப்பரா சொதப்ப ஆரம்பிச்சது. அப்போதான் எதிர்பாராம ஒரு நாள் அவளை சந்திக்கவேண்டியதா போயிருச்சு. அந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (?) 9 மணி அளவில் , அலாரம் வைத்தது போல என் அம்மா எ

காதல் குறிப்பு

படம்

என்னருகே நீயிருந்தால் - பகுதி 1

1. கிரிக்கெட் மேட்ச் இரத்தத்தை மட்டும் உடல் முழுவதும் பரப்பிக்கொண்டிருந்த என் இதயம், காதலையும் சேர்த்து பரப்பத்தொடங்கியது. உன்னைப் பார்த்தபின்..! தன்னால் எவ்வளவு கோபத்தைக் காட்டமுடியுமோ அவ்வளவு கோபத்தையும் காட்டிக்கொண்டிருந்தது சூரியன். வானத்தில் இருந்து வெப்பம் மழையைப் பொழிவதுபோல் இருந்தது. கண்கள் பார்க்கும் திசையெல்லாம் கானல் நீரே நிரம்பியிருந்தது. நேரம் மதியம் 1 மணி இருக்கலாம். அங்கிருந்த அத்தனை முகங்களிலும் வியர்வைத்துளிகள் கூடாரமிட்டிருந்தன. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்த அங்கிருந்த யாருக்கும் நேரமில்லை. எல்லோர் முகத்திலும் வியர்வையை மீறிய ஒரு வித பதற்றம், ஒரு எதிர்பார்ப்பு. அங்கிருந்த அத்தனை கண்களும் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தன. என்னுடைய thigh pad ஐக் கட்டிக்கொண்டு, களம்புகத் தயாரானேன். "டே மாமா! லாஸ்ட் ஓவர் டா! 6 ரன் எடுக்கனும்டா. பத்தாததுக்கு பௌலிங் போடறது Mech தினேஷ் டா. நம்ம ஜெயிக்கிறதே இப்போ உன் கையில தாண்டா இருக்கு." காலில் விழாத குறையாக கதறிக்கொண்டிருந்தான் ராகேஷ். Mech Department தினேஷ். அனைவரும் பயப்படுவதற்கு முக்கியமான காரணம் அவன்தான். அ

நீர்

படம்

இதயம்

படம்

சோம்பல்

படம்