இடுகைகள்

ஜூலை, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிரப்ப முடியா காதல்

மொழிகளால் நிரப்பமுடியாத காதல்களைஎல்லாம் ஏனோ, இந்த 'ம்ம்ம்ம்ம்', 'அப்புறம்' நிரப்பிவிடுகிறது..! -செல்லா

இரு தேவதைகள்

படம்
நிரம்பி வழிந்துகொண்டிருந்தது அந்த மருத்துவமனை பெயர் சொல்லத்தெரியாத மருந்துகளின் வாசத்தால்! மழித்துத் துடைக்கப்பட்டிருந்த சலவைக்கல் தரையாய் சலனமின்றிக்கிடக்கிறது என் மனம். இன்னும் என்ன இருக்கிறது? என்ன மிச்சம் இருக்கிறது? எல்லா எதிர்பார்ப்புகளும் எல்லாக் கனவுகளும் காற்றோடு காற்றாய் கரைந்த பின் இன்னும் மிச்சமென்ன இருக்கிறது! ஒரு மகள், ஒரே மகள். இல்லை இல்லை! ஒரே தேவதை. ஒரே தெய்வம். அப்படித்தான் அவள் எனக்கு! மூவேழ் ஆண்டுகட்குமுன், ஒரு தேவதைத்திருநாளில், பூமியில் வந்து அவதரித்தாள் அவள்! ஒரு ஆண்மகன் என என்னையும், ஒரு அன்னை என என் மனைவியையும் ஊரறிய அறிவிப்பதற்காக..! அன்று, அந்த நன்னாளில், அவ்வழகிய நேரத்தில், பத்துமாதம் சுமந்த சுகத்தை இறக்கிவைத்தக் களிப்பிலோ என்னவோ, அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள் என் மனைவி. அழகாய்த் தூங்கிக்கொண்டிருந்தாள் என் மகள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரும்பிக்கொண்டிருந்த கேசம், சிறுமொட்டாய் மூடிக்கிடக்கும் கண்கள், சிறு இதழ், அதில் குறு நகை, கனவிலும் கூட கடவுளிடம் பேசும் கை கால்கள், வெண்பஞ்சாய் வெளுத்திருந்த தேகம்! அவ்வப்போது