உள்ளின் ஒளியே..!
நின்னை நினைப்பதன்றி, நிலத்தில் கிடைப்பதன்றி, தன்னை வறுப்பதன்றி, தன்னிலை யறிவதின்றி, மண்ணில் வேறு செயலில்லை..! மன்னன் மீறிய துணையில்லை..! கண்ணின் மணியாய், கண்டார் சொல்லறிவாய், பண்பின் பலனாய், பணிவின் அரணாய், நின்று நிலைத்தவனே..! நிழலாய்த் தொடர்பவனே..! பற்றும் திருவடியும், பகிரும் சொல்லமுதும், உற்றம் உறவும், கற்ற நல்லறிவும், நினதன்றி வேறில்லை..! நீயின்றி யாரில்லை..! நின்னை நினைத்து, என்னை விடுத்து, தன்னில் கலந்து, விண்ணில் நிறைந்திட, தன்னையே தந்தருள்வாய்..! தாயாய் நின்று காத்திடுவாய்..! மண்ணின் ஆதியே..! மறைவில்லா சோதியே..! -செல்லா