எதையோ கேட்கும் நண்பனுக்கு, உன் பெயரை விடையாய்க் கொடுத்துவிட்டு, பின் நாக்கைக் கடிக்கும் அந்த நொடியில் தான் வெளிப்பட்டுத் தொலைகிறது, உன் மீதான காதல்..! -செல்லா
உலகின் இந்த மூலையில் இந்த நிமிடத்தில் நினைத்துக்கொண்டிருக்கிறேன். இதே போல் இன்னொரு மூலையில் இன்னொரு நிமிடத்தில் நீ என்னை நினைத்துக்கொண்டிருப்பாயோ என..! -செல்லா