ஒரு வெட்டி(பையன்) கதை
இந்தக் கதையின் நாயகன், நாயகன் அப்படின்னுலாம் சொல்ல முடியாது. கதையோட கரு (ஓவரா பேசுறேன்ல) என்னை சுத்தி இருக்குறதுனால, ஒரு வகையில என்னை பத்தின கதைன்னு வச்சுக்கலாம். ங்கொய்யால நீயெல்லாம் ஹீரோவா அப்டின்னு நீங்க கேக்குறது தெரியுது. ஆனாலும், உங்களுக்கு வேற வழி கெடையாது. இந்தக் கொடுமையெல்லாம் நீங்க அனுபவிச்சுத் தான் ஆகணும். என்னை சுத்தி நடக்கவே நடக்காத விஷயங்கள வச்சு ஒரு கதை எழுதலாம்னு நெனச்சப்பதான் இந்த ஐடியா வந்துச்சு. இந்தக் கதை நல்லா இருக்குனு நெனச்சிங்கன்னா, இன்னொரு கதை எழுதி உங்கள சந்தோஷ(???)ப்படுத்துவேன். மொக்கையா இருக்குனு சொன்னிங்கன்னா, நல்லா இருக்குனு நீங்க ஒத்துக்குற வரை கதையா எழுதி சாவடிப்பேன். என்ன பண்லாம்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க.... ;) ஓகே. லெட்ஸ் ஸ்டார்ட் தி கதை. பகுதி-1: ஆபிஸ் அலப்பரை இன்னையில இருந்து சரியா ஒரு வருஷம் மூணு மாசத்துக்கு முன்னாடி, ஏதோ ஒரு நாள்....! வழக்கம் போல, என்னோட ரெட் கலர் அபாச்சி பைக்க பார்க்கிங் ல போட்டுட்டு இன்னிக்கி என்ன வில்லங்கத்த சந்திக்கப் போறோமோன்னு ஒரு பீதியோடையே ஆபிசுக்குள்ள நுழைஞ்சேன். ஆக்சஸ் கார்ட எடுத்து கதவுகிட்ட காட்டிட்டு, தி