இடுகைகள்
ஏப்ரல், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
சௌந்திரபாண்டி
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மேஜையின் மீது வைக்கப்படிருந்தது மிக நேர்த்தியாக மடிக்கப்பட்டிருந்த அந்த சேலை. அதன் நேர்த்தியே சொல்லிற்று, கண்டிப்பாக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கவேண்டும் என்று. தனக்கு சேலையும், மகளுக்கு சுடிதாரும் வாங்கி வந்திருக்கும் மகன், தன் கணவருக்கு எதுவும் வாங்கி வரவில்லையே என்று வருத்தப்பட்டாள் கோமதியம்மாள். அவரைப்பற்றி பேச ஆரம்பித்தாலே கோவப்படுவான் என்று தெரிந்தும், ஒருவித தயக்கத்தோடு ரவியிடம் கேட்டாள், "ஏம்பா. மொத மாச சம்பளத்துல அப்பாவுக்கு எதுவும் வாங்கிட்டு வரலியா?" என்று. "தினம் தினம் என்னை தண்ட சோறுன்னு, தரித்திரம், உருப்புடாதவன்னு திட்டுவாரு அந்த ஆளு. அவருக்கு நான் வாங்கிதரனுமா? பேசாம போம்மா. நான் எதாவது சொல்லிடப் போறேன்." பொரிந்து தள்ளினான் ரவி. நடந்து கொண்டிருந்த களேபகரங்கள் அத்தனையும் மெளனமாக வேடிக்கை பார்த்துவிட்டு, ரவியின் அப்பா, சௌந்திரபாண்டி எதுவும் பேசாமலேயே வெளியில் கிளம்பினார். சிறிது நேரம் கழித்து, டீ கடையில், "என்ன சௌந்திரபாண்டி, பையன் வேலைக்கு போயி இன்னையோட ஒரு மாசம் ஆச்சே. மொத மாச சம்பளத்துல என்ன வாங்கிக் குடுத்தான்?" என்ற