Saturday, July 30, 2016

உன்மீதான அந்தக் 'காதல்'..!

யாரோ
எப்போதோ அனுப்பும்
ஒரு குறுஞ்செய்தி
தூண்டிப்போகும்
உன் நினைவுகளையும்,
விளைவாய்
விழி தேடி அலையும் உன்
இறந்தகால உரையாடல்களையும்,
மீண்டும் நேசித்து,
மீண்டும் சுவாசித்துவிட்டு
மறுமுறை என்னைக்
கடந்து போகிறது,
உன்மீதான அந்தக்
'காதல்'..!


-செல்லா

சருகுகளல்ல யாம்

நசுக்கும் கால்களுக்குத் தெரிவதில்லை. கருகிச் சாக நாம் சருகுகளல்ல. விருட்சமாய் வெகுண்டெழும் ஆலமர விதைகளென..! செல்லா