Sunday, January 25, 2015

உன் பிரிவில்

காலியாய் இருக்கும் 
உன் இருக்கையைத்தான்
காதலிக்கிறேன்,
நீ அலுவலகம் வராத நாட்களில்..! 


-செல்லா

Tuesday, January 20, 2015

உன் மீதான காதல்

எதையோ கேட்கும் நண்பனுக்கு,
உன் பெயரை விடையாய்க் கொடுத்துவிட்டு,
பின் நாக்கைக் கடிக்கும்
அந்த நொடியில் தான்
வெளிப்பட்டுத் தொலைகிறது,
உன் மீதான காதல்..! 


-செல்லா

Friday, January 9, 2015

பள்ளிக்காதல் - 2

L.H.S = R.H.S என்று
எழுதவேண்டிய இடங்களில் எல்லாம்
இடது பக்கம் உன் பெயரையும்
வலது பக்கம் என் பெயரையும்
எழுதிவிட்டு வருகிறேன்..!

-செல்லா

பள்ளிக்காதல் 1

எந்த வேதிவினைச் சமன்பாடு கொண்டு
விளக்கித் தொலைப்பேன்,
நீ கடந்து செல்லும் போது
எனக்குள் நிகழும்
ஆயிரமாயிரம் வேதி வினைகளை... !

-செல்லா

Saturday, January 3, 2015

நினைவு

உலகின் இந்த மூலையில்
இந்த நிமிடத்தில்
நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
இதே போல்
இன்னொரு மூலையில்
இன்னொரு நிமிடத்தில்
நீ என்னை நினைத்துக்கொண்டிருப்பாயோ என..!

-செல்லா

Friday, January 2, 2015

சொல்லாத காதல்

காதலுக்கும், தபூ ஷங்கருக்கும்
மட்டுமே புரிகிறது,
காதலையே சொல்லாமல்,
காதலோடு வாழும் வாழ்க்கை
எவ்வளவு சுகமானது என்று..!

-செல்லா

இதயம்

இதயம் எப்போதும்
எக்ஸ்பாண்டபில் ஹார்ட் டிஸ்க்காகவே
மாறிவிடுகிறது,
உன் நினைவுகளைச் சேமிக்கத் துவங்கும் போது..!

-செல்லா

என்ன விதி?

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் ...