Posts

Showing posts from 2015

சிலரின் ரகசியங்கள்

தலையணைகளிலும், கழிவறைகளிலும் புதைக்கப்படுகின்றன
சில ஆண்களின் ரகசியங்கள்..!


-செல்லா

குழந்தைகள்

கவலைப்படுவதற்கான காரணங்கள் மட்டுமே பெரியவர்கள் தெரிந்து வைத்திருக்க,
சிரிப்பதற்கான காரணங்களைக் குழந்தைகள் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். 😊😊😊


-செல்லா

பதியப்படாத பதிவுகள்

எங்கோ ஓர் மூலையில்
உறங்கிக்கொண்டிருக்கிறது
என் காதல்.
எழுதிவிட்டு
பதியப்படாத பதிவுகளாய்...!


-செல்லா

சிரித்திருந்த பொழுதுகள்

சேர்ந்து சிரித்திருந்த போது, நினைக்கவே இல்லை. உன் நினைவுகள் என் வாழ்வை இவ்வளவு அழகாக்குமென்று...!  :-) :-) :-)
#மிஸ்ஸிங்_மை_பிரண்ட்ஸ்
-செல்லா

குட் மார்னிங்

ஒரு குறுந்தகவலில்
'குட் மார்னிங்' என்று சொல்லிவிட்டாய்.
இப்போதுபார்,
இந்தக் காலைவேளை
நகரமாட்டேன் என
அடம்பிடிக்கிறது...!


-செல்லா

ஒரு பயணம்

ஒரு வழியாக நான் அந்த குளிர்சாதனப் பேருந்தில் ஏறியிருந்த போது, மழை வலுத்திருந்தது. காற்றின் அசாத்திய வேகமும், இடியின் ஓலமும், மழையின் தீவிரமும் பேருந்தின் கூரையைப் பிளந்துகொண்டு உள்ளே வந்துவிடவா என்று கேட்டுக்கொண்டிருந்தது. யார் மீது என்ன கோபமோ அவைகளுக்கு? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. பயணச்சீட்டை வாங்கிவிட்டுக் காலியாய் இருந்த ஓர் இருக்கையைத் தேடி அமர்ந்து கொண்டேன். முக்கால்வாசி மட்டுமே நிரம்பியிருந்த பேருந்தில் அமர்வதற்கு நிறைய இடம் இருந்தது. சில பெரியவர்கள் தங்கள் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். நடுத்தர வயதைத் தொட்டிருந்த சிலரோ, எதையோ எண்ணிச் சிந்தித்துக்கொண்டும், மொபைல் போனில் பேசிக்கொண்டும் இருந்தனர். என் வயதையொத்த சில யுவ, யுவதிகள் தங்கள் காதுகளை 'இயர் போனில்' சிறை வைத்திருந்தனர். சில காதல் ஜோடிகள் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்துகொண்டு மழையை அணு அணுவாய் ரசித்துக்கொண்டிருந்தனர். நடந்துகொண்டிருந்த இந்த அத்தனை நிகழ்வுகளுக்கும் சிறிதும் பொருத்தம் இன்றி என் மனதோடு போராடிக்கொண்டிருந்தேன் நான். மூளைக்குள் குடைந்துகொண்டிருக்கும் அந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிய…

உன் பிரிவில்

காலியாய் இருக்கும் 
உன் இருக்கையைத்தான்
காதலிக்கிறேன்,
நீ அலுவலகம் வராத நாட்களில்..! 


-செல்லா

உன் மீதான காதல்

எதையோ கேட்கும் நண்பனுக்கு,
உன் பெயரை விடையாய்க் கொடுத்துவிட்டு,
பின் நாக்கைக் கடிக்கும்
அந்த நொடியில் தான்
வெளிப்பட்டுத் தொலைகிறது,
உன் மீதான காதல்..! 

-செல்லா

பள்ளிக்காதல் - 2

L.H.S = R.H.S என்று
எழுதவேண்டிய இடங்களில் எல்லாம்
இடது பக்கம் உன் பெயரையும்
வலது பக்கம் என் பெயரையும்
எழுதிவிட்டு வருகிறேன்..!

-செல்லா

பள்ளிக்காதல் 1

எந்த வேதிவினைச் சமன்பாடு கொண்டு
விளக்கித் தொலைப்பேன்,
நீ கடந்து செல்லும் போது
எனக்குள் நிகழும்
ஆயிரமாயிரம் வேதி வினைகளை... !

-செல்லா

நினைவு

உலகின் இந்த மூலையில்
இந்த நிமிடத்தில்
நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
இதே போல்
இன்னொரு மூலையில்
இன்னொரு நிமிடத்தில்
நீ என்னை நினைத்துக்கொண்டிருப்பாயோ என..!

-செல்லா

சொல்லாத காதல்

காதலுக்கும், தபூ ஷங்கருக்கும்
மட்டுமே புரிகிறது,
காதலையே சொல்லாமல்,
காதலோடு வாழும் வாழ்க்கை
எவ்வளவு சுகமானது என்று..!

-செல்லா

இதயம்

இதயம் எப்போதும்
எக்ஸ்பாண்டபில் ஹார்ட் டிஸ்க்காகவே
மாறிவிடுகிறது,
உன் நினைவுகளைச் சேமிக்கத் துவங்கும் போது..!

-செல்லா