Posts

Showing posts from September, 2013

குங்பூ - பகுதி நான்கு

4. சில நடைமுறை உபயோகங்கள்
"என்னப்பா போன பார்ட் ல ரொம்ப டெக்னிகல்லா எழுதிட்ட. கொஞ்சம் ஜாலியாவும் எழுதுப்பா" என்று சில நண்பர்கள் அங்கலாய்க்க அவர்களுக்காக கொஞ்சம் டெக்னிகல்லை விடுத்து கொஞ்சம் ஜாலியாகவும் எழுத முயற்சிக்கிறேன் இந்த முறை... :) இந்தப் பதிவில் சராசரி வாழ்க்கையில் நான் குங்பூவை உபயோகித்த சில இடங்களைப்பற்றிக் கூறுகிறேன். ஏற்கனவே, கைகள் மற்றும் வயிற்றுப் பகுதிகளுக்கான உடற்பயிற்சி பற்றிப் பேசியிருப்பதால் அவை தொடர்பாக நான் செய்த சில பயிற்சிகளை (சேட்டைகளை) இங்கு பகிர்கிறேன். கைகளை வலுப்படுத்துவது போல் தாக்குவதற்கு பழக்கப்படுத்த சில பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது மற்றும் அடிப்படையானது "குத்துதல் (பஞ்ச்)" முறை. சில அடிப்படை பஞ்ச் முறைகளைக் கற்றறிந்த பின், எங்கள் வீட்டை கொஞ்சம் கொஞ்சமாக குத்தியே பெயர்த்தெடுக்கும் முயற்சியில் சில நாள் இறங்கியிருந்தேன். ஆனால் அதன் பின் என் அம்மா, என்னைப் பெயர்த்தெடுக்கும் முயற்சியில் இறங்கியதால் அந்த எண்ணத்தை அப்படியே ஓரங்கட்டிவிட்டேன். கடைசியில் வெகு சீக்கிரமே என் அம்மாவே பாராட்டும்படி, அதை விட ஒரு நல்ல வழி கிடைத்தது.…

குங்பூ - பகுதி மூன்று

Image
3. கோர் அல்லது வயிறு
உடம்பில் எத்தனையோ உறுப்புகள் இருந்தும் வயிற்றுப் பகுதியைக் கோர் (Core) என்று அழைக்க என்ன காரணம்? வயிறு சம்மந்தப்பட்ட உடற்பயிற்சிகளை என் மாஸ்டர் கோர் எக்சர்சைஸ் என்று கூறியதும், இது தான் எனக்குத் தோன்றிய முதல் சந்தேகம். இதைத் தெரிந்துகொள்ள எனக்கு சிறிது மனித உடலமைப்பு பற்றிய அறிவியல் தேவைப்பட்டது. நல்ல வேளையாக, நான் 11, 12 ஆம் வகுப்புகளில் உயிரியல் பாடம் படித்திருந்தது அப்போது துணை நின்றது.
நம் மார்பெலும்புகள் இருதயம் மற்றும் நுரையீரல் பகுதிகளை ஓர் அரணாக நின்று பாதுகாக்கிறது. நான் முந்தைய பதிவுகளில் கூறியிருந்த புஷ் அப் உடற்பயிற்சிகள் நம் மார்பெலும்புகளை வலுப்படுத்த பெரிதும் உதவுகின்றன. ஆக, உடலின் முன் புறத்திலிருந்து இருதயப் பகுதிகளைப் பாதுகாக்க ஆள் ரெடி. என்னதான் உடலின் பின் புறத்தில் ஓர் தாக்குதல் ஏற்பட்டாலும், அவை இருதயம் அல்லது நுரையீரலைப் பாதிக்கும் வாய்ப்புகள் சற்று குறைவே. மீதம் இருப்பது பக்கவாட்டுப் பகுதிகள் மட்டுமே. இருதயம் மற்றும் நுரையீரல் பகுதிகளை என்னதான் மார்பெலும்புகள் முன்புறம் நின்று அரணாகப் பார்த்துக் கொண்டாலும், அவற்றைப் பக்கவாட்டிலிருந்து பார்த…

குங்பூ - பகுதி இரண்டு

2. உன் உயிர் உன் கையில்

"உங்கள் உயிர் உங்கள் கைகளில்"

இந்த வரிகள் என் குங்பூ மாஸ்டர் பேச்சிமுத்து அதிகம் கூறுபவை. குங்பூவில் பெரும்பாலும் கைகளின் ஆதிக்கமே அதிகம் இருக்கும். இதற்கு அர்த்தம் குங்பூ கலை கால் அசைவுகளை உபயோகிப்பதை விட பெரும்பாலும் கை அசைவுகளையே உபயோகிக்கிறது. எதிராளியைத் தடுப்பது, தாக்குவதிலிருந்து பல வகையான ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சிகள் செய்வது வரை கைகள் தான் பெருமளவில் குங்பூவில் பயன்படுத்தப் படுகின்றன. (ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சிகள் பற்றிய விவரங்களை ஒரு பதிவாக பதிந்துவிடுகிறேன்).

சில நேரங்களில் நம் உடலின் மொத்த எடையையும் தாங்கவேண்டிய சூழல் கைகளுக்கு ஏற்படலாம். அப்போது கைகள் வலுவாக இல்லாவிட்டால், புத்தூருக்குப் போகவேண்டிய நிலைதான் ஏற்படும். இன்னும் சில நேரங்களில் கைகள் சரியான முறையில் உடலைத் தாங்காவிட்டால் கழுத்து மற்றும் தலைப் பகுதிகளில் அடிபடக் கூடிய வாய்ப்புகள் 100க்கு 120% உண்டு. இந்த இடங்களில் அடிபட்டால் என்னவாகும் என்று நான் சொல்லி உங்களுக்கெல்லாம் தெரியவேண்டியதில்லை. இதனாலேயே கைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன.

குங்ப…

குங்பூ - பகுதி ஒன்று

1. குங்பூ - ஆரம்ப நாட்கள்

(சீனாவின் தற்காப்புக் கலையாக கருதப்படும் குங்பூ கலை, ஒரு தமிழரான போதிதர்மரால் கி.பி. 5-6 நூற்றாண்டுகளில் சீனாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. சில சீன அறிஞர்களின் நூல்களில் ஒரு தென்னிந்தியர் குங்பூ கலையின் அடிப்படையைக் கற்றுக்கொடுத்துச் சென்றதாகக் கூறுகிறார்கள். உண்மை எதுவாயினும் சீனர்கள் குங்பூ கலையை நன்றாக மெருகேற்றி இருக்கிறார்கள் என்பதும் தவிர்க்க முடியாத உண்மை)

குறிப்பு: சில உதாரணத்திற்காக சில உடற்பயிற்சிகள் பற்றிக் கூறியிருக்கிறேன். அவை எதையும் செய்து பார்க்க வேண்டாமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

குங்பூ கலையை எதற்காகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று என்னைச் சுற்றியிருக்கிற சிலரும் இணையதள உலவிகள் சிலரும் கூறிய கருத்துக்களாவது, உடலில் எந்த பகுதியில் தாக்கினால் எதிரி வீழ்வான் என்று தெரிந்து தாக்குவதற்காகவும், தன்னை தீயவர்களிடம் இருந்து காத்துக் கொள்வதற்காகவும், உடல் மற்றும் மன வளத்திற்காகவும் இந்தக் கலையைக் கற்கலாம் என்பதாம். இத்துடன் சேர்த்து இன்னும் சில விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் நான்.

நான் எத்தனையோ முறை வீட்டைச் சுத்தம் செய்திருக்…

எனக்குப் பிடித்தது

எனக்குப் பிடித்தது என்ன?

இந்தக் கேள்விக்கான விடையை கிட்டத்தட்ட 6, 7 வருடங்களாக தேடிக்கொண்டிருந்தேன். இதற்கான பதில் எனக்குக் கிடைக்கவே இல்லை. இப்போதும் கிடைத்திருக்கிறது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. "ஏன் உறுதியாகச் சொல்ல முடியவில்லை" என்று கேட்டால் தெரியவில்லை என்று தான் பதில் சொல்ல நேரிடுகிறது. அந்தக் காலத்தில் மாணவர்களுக்கு வழி நடத்த குரு இருப்பார். அரசவையில் கூட அரசருக்கு அறிவுரை கூற ராஜகுரு என்று ஒருவர் இருப்பதாக எப்போதோ படித்ததாக ஞாபகம். ஆனால், இப்போது வழிநடத்த எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற கேள்வி இப்போதும் எனக்கு உண்டு. எதை நோக்கி நான் பயணப்படவேண்டும் என்று கேட்டால், பெரும்பாலும் எனக்குக் கிடைத்த விடை "பணம்". உண்மையில் இது தானா? தெரியவில்லை. யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்ளாத மூளை, ஏனோ என் உள்மனம் சொல்வதை மட்டும் சில நேரங்களில் ஏற்றுக்கொள்கிறது.

அன்றும் அப்படித்தான். இந்த IT துறை எவ்வளவோ எனக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தது நான் வேலைக்கு சேர்ந்த அந்த முதல் வருடத்தில். ஏதோ பிரச்சனையை என் மனதிற்குள் குடைய, யாருடனும் பேச விருப்பம் இன்றி அந்த 51…

பொன்னம்மாள் பாட்டி

"அய்யனாரப்பா! என் புள்ளைய நீதான் எப்பவும் பாத்துக்கணும். அவனுக்கு எந்த ஒரு நோய் நொடியும் வந்துராம, நல்லபடியா இருக்கணும். அவனுக்கு யாராலையும் எந்த தொல்லையும் வந்துரக் கூடாது. முக்கியமா, அந்த மூணாவது தெருல இருக்குறாளே அந்த முண்டக்கண்ணி, அவ என் மவன் மேல எந்தக் கண்ணும் வச்சுடக்கூடது. கடன்காரி. அவ முழியே சரியில்ல. வேற எந்த ஒரு குத்தம் குறை பண்ணியிருந்தாலும் எம்மகன மன்னிச்சு அவன நல்லபடியா பார்த்துக்கப்பா. அவன் நல்லபடியா வளந்து, பெரிய ஆளாகி, நாலு பேரு மெச்சுற மாதிரி பெரிய உத்தியோகஸ்தனா வரணும். பெரிய கொழாய் சட்டையெல்லாம் மாட்டிக்கிட்டு தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கலீசுல பேசணும். இதையெல்லாம் இந்த சிறுக்கி பார்த்துப்புட்டு தான் கண்ண மூடனும். இதெல்லாம் நீதானப்பா நடத்தி வைக்கணும். இதெல்லாம் நடந்துட்டா, வருஷந்தவராம உன் எல்லைக்கு வந்து, கெடா வெட்டி பொங்க வைக்கிறேன்யா சாமி. நீதான் பாத்துக்கணும். நீதான் பாத்துக்கணும்". அய்யனார் காலடியில் இருந்த விபூதியை கை நிறைய எடுத்து நெற்றி முழுக்க இட்டுக்கொண்டாள் வேலம்மாள். தன் மனதில் இருந்த எல்லா வேண்டுதலையும், சரியாகச் சொன்னால் ஒரே ஒரு வேண்டுதலை அய்யனாரின் எ…

சீதனம் - ஒரு சிறிய ஆய்வு

இந்த பதிவை முக்கியமாக என்னைப்போல 'சீதனம்' என்கிற வார்த்தையின் முழு அர்த்தம் தெரியாத அனைத்து நண்பர்களுக்காகவும் பதிகிறேன்.
"உங்க அம்மா வீட்டில இருந்து என்னடி சீதனமா கொண்டுவந்துட்ட? பெருசா பேசுற?" -இந்த மாதிரி வசனங்கள் சினிமாவில் அடிக்கடி மாமியார் மருமகள் சண்டையிலோ அல்லது கணவன் மனைவி சண்டையிலோ இடம்பெறும். பொதுவாக 'சீதனம்' என்கிற வார்த்தை ஒரு பெண் தன் பிறந்தவீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது உடன் கொண்டுவரும் பண்டபாத்திரங்கள், நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றைக் குறிப்பதாக அமைகிறது. ஆனால் இந்த 'சீதன'த்தை அந்தப் பெண் அனுபவிப்பதும் அனுபவிக்காமல் போவதும் அந்தப்பெண் மணக்கப்போகும் மணமகன் வீட்டினரின் தலையீட்டில் இருக்கிறது. சரி உண்மையிலேயே இந்த வழக்கம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்று தெரிந்துகொள்வோமா? 'சீதனம்' என்ற வார்த்தையின் உண்மையான சொல் ஸ்திரீதனம் ஆகும். ஸ்திரீ + தனம் = ஸ்திரீதனம் = சீதனம் ஸ்திரீ - பெண்
தனம் - செல்வம்/பணம்
தற்போது ஒரு பெண்ணின் திருமண வயது 21. ஆனால் அந்தக் காலங்களில் 12, 13 வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்துவைக்கும்…

சேர்ந்திருக்கும் தருணங்கள்

Image

மின்மினிப்பூச்சி

Image

முதல் முத்தம்

Image

கண்ணு தெரியலம்மா.... :(

ஏதோ ஒரு நடுநிசி இரவில், ஒரு 8 வயது சிறுவன். மகன்: (ஒரு வித பதற்றமான லேசான அழுகையுடன்) அம்மா, அம்மா, எனக்கு கண்ணு தெரியாம போச்சும்மா, அம்மா கண்ணு தெரியாம போச்சுமா. அம்மா: (பதறியடித்தவாறே) என்னடா சொல்லுற? என்ன ஆச்சு? மகன்: ஆமாம்மா, எனக்கு எதுவுமே தெரியல. நீ எங்க இருக்கணு தெரியல. அப்பா, பாப்பாவல்லாம் (தங்கை) தெரியல. அங்க பாரும்மா, நைட்ல நம்ம போட்டு வச்சுருப்போமே ஒரு விடி லைட் (இரவு நேர சிறிய பல்பு) அது கூட தெரியலம்மா. நெஜமாவே எனக்கு கண்ணு தெரியலம்மா. எல்லாமே இருட்டா இருக்குதும்மா.. ஹீஎஈஈஈ...... அம்மா: டே கிறுக்கா. கரண்ட் போயிருச்சுடா. ஏதாவது உளராம பேசாம படுத்து தூங்கு. என் தூக்கத்த வேற கெடுத்துகிட்டு. இதுல அழுகை வேற. மகன்: (ஒரு பெருமூச்சுடன்) கரண்ட்டு போச்சா, நான் கூட எனக்கு கண்ணு தெரியலையோனு நெனச்சேன்.
குறிப்பு: அந்த கிறுக்கன் நான்தான்.