Saturday, July 27, 2013

என் வருங்கால மனைவிக்கு....!

உன்கிட்ட சொல்லாம நான் வச்சுருக்கிறதெல்லாம் இது தான். என்னைக்காவது உன்னைப் பார்க்குறப்ப, உன்ன பார்த்த சந்தோஷத்துல இதெல்லாம் நான் மறந்துட போறேனோன்னு ஒரு பயம். அதனால தான் எழுதி வைக்கிறேன்.

- நீ யாரோ எப்படி இருப்பியோ எனக்கு தெரியாது. ஆனா என்னோட எல்லா கவிதைகளும் உனக்கு தான்.

- இது வரை, யார்கிட்டயும் "உன்ன காதலிக்கிறேன்"னு சொன்னதில்ல. ஆனா உன்கிட்ட சொல்லணும். ஒரு தடவை ரெண்டு தடவை இல்ல. 1000, 2000 தடவை இல்ல. வாய் வலிக்கிற வரைக்கும். வாய் வலிச்சுகிட்டே இருந்தாலும் கூட, "உன்ன காதலிக்கிறேன்"னு சொல்லிக்கிட்டே இருக்கணும்.

- எனக்கு ஒழுங்கா சமைக்க தெரியாது. இருந்தாலும் உனக்காக சமைக்க கத்துக்கணும். வாரத்துல கண்டிப்பா ஒரு நாளாவது உனக்கு சமைச்சு போடணும்.

- நீயில்லாம இவ்வளவு நாள் இருந்திருக்கேன். உன்ன நெனச்சு, நீ இல்லாதத நெனச்சு ரொம்ப வருத்தப்பட்டிருக்கேன். கண்டிப்பா, நீ கெடைச்ச உடனே, உன்ன கட்டி பிடிச்சிகிட்டு, என் கண்ணீர் தீர்ற வரை அழனும். நீ இல்லாம போனதால தானே, என்னை நேசிக்க யாருமே இல்லைன்னு இவ்வளவு வருத்தப்பட்டிருக்கேன்.

- எனக்கும் தங்கச்சிங்க இருக்குறாங்க. எங்க வீட்டுல நாங்க அவங்கள எப்படி பார்த்துகிறோம்னு எனக்கு தெரியும். கண்டிப்பா உங்க வீட்லயும் அப்படித்தான் உன்ன வளர்த்துருப்பாங்க. ஒரு இளவரசி மாதிரி. கண்டிப்பா, உன்ன மகாராணி மாதிரி வச்சு பார்த்துக்கணும்.

- உன்ன மட்டும் பிரசவ அறைக்குள்ள அனுப்பிட்டு வெளியே உக்காந்துக்க எனக்கு விருப்பம் இல்ல. அக்கினி சாட்சியா உன்ன எந்த நேரத்துலயும் விட்டு பிரியமாட்டேன்னு சொல்லித்தான் உன்ன கல்யாணம் பண்ணுவேன். அப்புறம் எப்படி பிரசவ அறைக்குள்ள மட்டும் உன்ன தனியா அனுப்புவேன்? என் வாழ்க்கையோட எவ்வளவோ முக்கியமான தருணத்துல நீ இருக்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன். உன்னோட, நம்ம வாழ்க்கையோட முக்கியாமான ஒரு தருணத்துல, ஒரு குழந்தைய நீ பெத்தெடுக்க போற அந்த நேரத்துல, உன்னை தனியா விட்டுப்போக என்னால முடியாது.

- எப்படியெல்லாம் என் வாழ்க்கை அமையலைன்னு நான் வருத்தப் பட்டேனோ, அந்த வாழ்க்கையெல்லாம் நான் உன்னோட சேர்ந்து வாழ்ந்திடனும்.

- உன்னைத் தான் என்னோட பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட் பிரண்டா ஆக்கிக்கணும்.

- உன்னோட ஆசையெல்லாம் நனவாக்கிக் குடுக்கணும்

- உன்னையே முதலும் கடைசியுமா என் காதல் தீர்ற வரைக்கும் காதலிச்சிடனும்



-செல்லா 

Wednesday, July 24, 2013

மழையின் குறும்பு

என்னோடு சேர்ந்து குறும்பு செய்துவிட்டு
என்னோடு சேர்ந்து குதூகலித்துவிட்டு
என்னை முழுக்க நனைத்துவிட்டு
எனக்கு சந்தோஷத்தை வாரிக்கொடுத்துவிட்டு
இப்போது
என் அன்னை சேலைத்தலைப்பில்
எனக்குமுன் சென்றமர்ந்துவிட்டாயே மழையே
உனக்குத்தான் எவ்வளவு குறும்பு..!


-செல்லா

சருகுகளல்ல யாம்

நசுக்கும் கால்களுக்குத் தெரிவதில்லை. கருகிச் சாக நாம் சருகுகளல்ல. விருட்சமாய் வெகுண்டெழும் ஆலமர விதைகளென..! செல்லா