Friday, November 30, 2012

அம்மாவுக்கு பிடித்தது

எத்தனையோ அம்மாக்களுக்கு,
பிள்ளைகளுக்குப் பிடிக்கும் அனைத்தும் தெரியும்.
ஆனால்,
எத்தனை பிள்ளைகளுக்கு
அம்மாவுக்குப் பிடிக்கும் அனைத்தும் தெரியும்?

-செல்லா

Thursday, November 29, 2012

முந்நூறு பக்கங்கள்

முந்நூறு பக்கங்கள் எழுதிவிட்டேன்.
ஆச்சரியமாக இருக்கிறது!
எப்படி முந்நூறு பக்கங்கள் எழுதினேன் என்றல்ல.
எப்படி முந்நூறு பக்கங்களிலும் உன்னைப்பற்றியே எழுதினேன் என்று!

-செல்லா 

சருகுகளல்ல யாம்

நசுக்கும் கால்களுக்குத் தெரிவதில்லை. கருகிச் சாக நாம் சருகுகளல்ல. விருட்சமாய் வெகுண்டெழும் ஆலமர விதைகளென..! செல்லா