Saturday, June 25, 2011

குடும்பம்

அன்று
அன்பான காதலும்
அழகான குறிக்கோளும்
அமைதியாக வாழ்ந்தன என் இதயத்தில்.......!

இன்று
என் கையாலேயே என் இதயம் நசுக்கப்படுகிறது.
என் கனவுகள் நொறுக்கப்படுகின்றன.
என் ஆசைகள் அழிக்கப்படுகின்றன.
எல்லாம் என் குடும்பத்திற்காக.......!

வாழ்நாள் குறிக்கோளும்
வாசல் தேடி வந்த காதலும்
வழி மாறி போன பின்னும்,
அழ மனம் வரவில்லை.
 என் கண்ணீராவது என்னுடன் இருக்கட்டுமே என்கிற நப்பாசையில் தான்.......!

-செல்லா

Saturday, June 18, 2011

உரிமை

திருமணம் நடந்தது உனக்கு.
உரிமை பறிக்கப்பட்டது எனக்கு.
இனி எப்படிச் சொல்லுவேன்,
நீ என் காதலி என்று......................?



-செல்லா 

Sunday, June 12, 2011

உன் ஞாபகம்

தொலைந்து போன இதயமும்
மறந்து போன காதலும்
உன்னை மட்டுமே ஞாபகப்படுத்துகின்றன..................!


-செல்லா 

என்ன விதி?

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. இது நியூட்டனின் மூன்றாம் விதி என்கிறாய். அப்படியானால் நான் தரும் ஒவ்வொரு முத்தத்திற்கும் பதில் ...