இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன்னைப்போல் ஒருவன்

தியாகராய நகரின் பரபப்பான வீதிகளைப் பற்றித் தெரிந்தவர்கள், ஞாயிற்று கிழமை பொழுதை அங்கு கழிக்க விரும்ப மாட்டார்கள். அளவு கடந்த கூட்டமும், வாகன இரைச்சலும் மண்டிக்கிடக்கின்ற அந்த தெருக்களில், தண்ணீராய் பணத்தை செலவழிப்பவர்கள் மட்டுமே ராஜ போகம் பெறுகிறார்கள். பலரின் நிலைமை, மிட்டாய் கடையை வேடிக்கை பார்க்கும் குழந்தை போல தான். அது சரி. இப்போது எதற்கு இந்த தேவையில்லாத விமர்சனம்? நான் சொல்ல வந்த விஷயமே வேறு. சமீபத்தில் திருமணமான, என் சகோதரியை (பெரியம்மா மகள்) காண தியாகராய நகர் செல்ல வேண்டி இருந்தது. பார்த்து விட்டு வரும் வழியில், ஒரு நபரை சந்திக்க நேரிட்டது. என்னுள் ஒரு புது மாற்றத்தை ஏற்படுத்தியவர் இவர். பெயர் வெளியிட விரும்பாத இந்த நண்பர், (நாம் குமார் என்று வைத்துகொள்வோமே) என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் சற்றே ஆச்சர்யத்தையும், பெருமளவு மாற்றத்தையும் என்னிடம் ஏற்படுத்தியது. மகிழ்ச்சியாக பேசிய இவரின் வாழ்க்கை, மகிழ்ச்சியாக இல்லை. குமார் சிறுவயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர். இதனால், இவரது கால்கள் தன் செயல்பாட்டை இழந்தன. வேலை பறி போனாலே வாழ்வு முடிந்ததாக நினைக்கும் பலர் மத்தியில், தன

மனிதநேயம்

பணத்தால் சிதறடிக்கப்பட்ட மனிதனின் மனக்கண்ணாடி......! -செல்லா 

காப்பகம்

 இங்கு இருப்பவர்கள் ஆதரவு அற்றவர்கள் அல்ல.....! நம்மால் அனாதைகளாக்கப்பட்டவர்கள்.....! -செல்லா

குடும்பம்

அன்று அன்பான காதலும் அழகான குறிக்கோளும் அமைதியாக வாழ்ந்தன என் இதயத்தில்.......! இன்று என் கையாலேயே என் இதயம் நசுக்கப்படுகிறது. என் கனவுகள் நொறுக்கப்படுகின்றன. என் ஆசைகள் அழிக்கப்படுகின்றன. எல்லாம் என் குடும்பத்திற்காக.......! வாழ்நாள் குறிக்கோளும் வாசல் தேடி வந்த காதலும் வழி மாறி போன பின்னும், அழ மனம் வரவில்லை.  என் கண்ணீராவது என்னுடன் இருக்கட்டுமே என்கிற நப்பாசையில் தான்.......! -செல்லா

உரிமை

திருமணம் நடந்தது உனக்கு. உரிமை பறிக்கப்பட்டது எனக்கு. இனி எப்படிச் சொல்லுவேன், நீ என் காதலி என்று......................? -செல்லா 

உன் ஞாபகம்

தொலைந்து போன இதயமும் மறந்து போன காதலும் உன்னை மட்டுமே ஞாபகப்படுத்துகின்றன..................! -செல்லா 

உன் குரல்

படம்

தவிப்பு

படம்

அட்சய பாத்திரம்

படம்

காதல்

படம்

தொலைபேசி அழைப்பு

படம்

ஓவியம்

படம்

மனமா? பணமா?

படம்
மனமிருந்தால் மார்க்கமுண்டு  என்கிறார்கள்......! பின்பு, எங்களிடம் மட்டும்  ஏன் பணமிருந்தால் தான் படிப்பு  என்கிறார்கள்..............?                         -செல்லா

என் காதல்

படம்
அனாதையாய் விட்டுச் செல்லும் உன்னைப்பார்த்து அழுகிறது என் காதல்.....! அடித்து விட்டு செல்லும் அன்னையைப் பார்த்து அழுகின்ற குழந்தை போல.......! -செல்லா

நிலவும் நாமும்

படம்

காதல் என்றால் என்ன?

படம்
சொல்லிக்கொள்ளாமல் சென்றவள், என்னிடம் சொல்லாமல் சொன்னது.....! காதல் பெறுவதல்ல கொடுப்பது என்று......! -செல்லா