இடுகைகள்

டிசம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சச்சின் டெண்டுல்கர்

படம்
அரிச்சுவடி அறியும் வயதில் ஆடக் கற்றவன், பலர் ஆடி முடிந்தபின்னும் ஆடிக் கொண்டிருக்கிறான்! மைதானங்களின் புழுதியில், மையல் கொண்டிருந்தன அவன் கால்கள்! சீறி வரும் பந்துகளை சிதறடிப்பதில் இருந்தது அவன் காதல்! அக்னி வெயிலில் ஆண்டுதோறும் காய்ந்துகொண்டு இருந்தது அவன் தேகம்! பழம் தின்று  கொட்டை போட்ட ராஜாங்கங்களுக்கு மத்தியில், ஆரம்பமானது அவன் அரங்கேற்றம்! பாலகன் என்று பரிகசித்த பலராலும் பார்த்துக்கொண்டு நிற்கத்தான் முடிந்தது! சிங்கங்களே மண்ணைக் கவ்வும் போர்க்களத்தில், சிறுவனாய் நின்று சாதிக்க ஆரம்பித்தான்! உயரத்தை கேலி செய்தோர் மத்தியில், உயரத்தை உயர்த்திக் கொண்டே சென்றான்! புகழும் பரிசும் தேடி வந்தன! சாதனைகளும் சரித்திரங்களும் கூடிக்கொண்டே சென்றன! ஆனால் இதற்காகவா, இந்த சாதனைகளுக்காகவா, எல்லோரும் நேசிக்கின்றனர் அவரை? இல்லை. துவண்டு கிடக்கும் கோடான கோடி நெஞ்சங்களில், நம்பிக்கை என்னும் நல்விதையை நட்டதால்....! தோற்றுவிடுவோம் என்று தடுமாறும் வேளையில், தோல்வி வரும் வரை எதிர்த்து போராடியதால்.....! தனியொரு மனிதனால் என்ன செய்ய முடியும்

கவிதைகள்

படம்
எல்லோராலும் நேசிக்கப்படும் கவிதைகள், சில நெஞ்சங்களின் நேசம் கிடைக்கததால் உருவானவை....! -செல்லா 

என் மனமும்.....! நானும்....!

கார்த்திகை மாத மழையின், காலைப் பொழுதில், வெறுமையை விரட்டிக்கொண்டு இருந்த என்னிடம், என் தனிமை கேட்டது......! "பார்! உனக்காக யாரும் இல்லை! உன்னை நேசிக்கின்ற நெஞ்சம் இல்லை! உனக்காக அழுகின்ற கண்கள் இல்லை! உன் பேர் உச்சரிக்கும் உதடுகள் இல்லை! உன்னை நேசிக்க ஆள் இல்லாத உலகில், யாரை நேசிக்க நீ வாழ்கிறாய்.....?" என்று. உண்மையைச் சொன்ன என் தனிமையிடம், உவகையுடன் சொன்னேன். "ஆம்! எனக்காக யாரும் இல்லை! என் தந்தை போல்! என்னை நேசிக்கின்ற நெஞ்சம் இல்லை! என் அன்னை நெஞ்சம் போல்! எனக்காக அழுகின்ற கண்கள் இல்லை! என் நண்பனின் கண்கள் போல்! என் பேர் உச்சரிக்கின்ற உதடுகள் இல்லை! என் தங்கை போல்! இவர்களைப் போல் என்னை நேசிக்க ஆள் இல்லாத இவ்வுலகில், இவர்களை நேசிக்கத்தான் நான் வாழ்கிறேன்......!" என்றேன் சிரித்துக்கொண்டே.....! -செல்லா