இடுகைகள்

ஜூலை, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மின்னல்

படம்

எங்கே இருக்கிறாய் நண்பா

படம்
எங்கே இருக்கிறாய் நண்பா! உறவு சுடுகிறது! காதல் கொல்கிறது! துரோகம் துரத்துகிறது! ஆசை அலைக்கழிக்கிறது! விழிகளில் கண்ணீர் ததும்பி நிற்கிறது! மனதில் பாரம் நிரம்பி இருக்கிறது! ஆறுதல் சொல்லவோ, அன்பு காட்டவோ ஆளின்றித் தவிக்கிறேன். அருகில் நீ இல்லாததால்........! என் இன்பத்தை உன் இன்பமாய் , என் ஏக்கம் புரிந்த நீ எங்கே......? என் வலியை அறிந்த நீ எங்கே.....? என்னை என்னாய் உணர்ந்த நீ எங்கே.....? காலத்தின் கைகளில் சிறைப்பட்டு, கண்ணீருக்குள் கரைந்து காணமல் போகும்முன், என்னைக் காப்பாற்ற வருவாயா......? எங்கே இருக்கிறாய் நண்பா.......! -செல்லா

வறுமை

படம்
செருப்பைத் துடைக்கிறேன். என் வறுமையைத் துடைக்க முடியாததால்......! -செல்லா

முயற்சி

படம்
நடக்க முடியாத என்னை, நடக்க வைக்கிறது. முயற்சி.........! -செல்லா

கடல்

படம்

சத்தம் போடாதே

படம்

நீ (ஒரு தாயின் கனவு)

என்ன செய்வாய் நீ? அழகாய் சிரிப்பாயா? அழுது அடம் பிடிப்பாயா? கோபம் கொள்வாயா? குறும்புகள் செய்வாயா? அன்னைஎன் மடியில் தவழ்வாயா? தந்தையின் தோளில் துயில்வாயா? முத்தம் கொடுப்பாயா? முறைத்துக் கொண்டு நிற்பாயா? ஆணாய் பிறந்து நாடாள்வாயா? பெண்ணாய் பிறந்து வீடாள்வாயா? சமர்த்தாய் உண்பாயா? சாப்பிட மாட்டேன் என்பாயா? ஐந்து மாதம் முடியும் முன்னே, ஆயிரம் கனவுகள் என் நெஞ்சில்...! கருவறை நீ தாண்டும் முன்பே கற்பனை கோடி என் கண்ணில்......! கொஞ்சம் பொறுத்துக்கொள். ஈரைந்து மாதம் தான், இந்தச் சிறை உனக்கு....! வருங்காலம் உனக்காக, காத்துக்கொண்டு இருக்கு.....! நிலமான என்னுள்ளே, விதையாக இருக்கும் நீ, மரமாகும் காலம் வரை , மறவாமல் காத்திருப்பேன்.....! கருவறை நீ தாண்டும் போதே, உன் கவலைகளை நான் கொள்வேன்........! பிறக்கும் உன் வலியைக் கூட, பிரசவ வலியாய் நானே ஏற்பேன்........! என் செல்வமே......! சிறைப்பட்டுக் கிடக்கும் நீ, சிறகு விரித்துப் பறக்கும் போது, காவலாய் நானும் வருவேன், காற்றாக உன்னோடு.......! -செல்லா

ஒரு அன்னையின் குரல்

என் உயிரை பணையம் வைத்து உன்னைப் பெற்றதற்கு, எனக்கு இன்று கிடைத்த பரிசு.......! அநாதை இல்லத்தில் ஓர் மூலை........! -செல்லா

சிற்பம்

சிற்பங்களின் அழகைக் கண்டு நீ ரசிக்கிறாய். உனக்குப் புரியவில்லையா, அவையெல்லாம் உன்னழகைக் கண்டுதான் சிலையானவை என்று.........! -செல்லா

நேசம்

உன் பிரிவில் தான் தெரிந்தது நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று! உன் கோபத்தில் தான் தெரிந்தது நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய் என்று! -செல்லா

உன் பிரிவு

குழந்தையில் என் அன்னையிடம் பாலுக்காக அழுததை விட அதிகம், இப்போது உன் பிரிவை எண்ணி நான் அழுவது......! -செல்லா

கடவுள்

கடவுளும் சிறையிருக்கிறார், கருவறைக்குள்.......! கள்வர்கள் கவர்ந்து சென்று விடுவார்களோ என்று பயந்து.........! -செல்லா

பெண் சிசு

ஆனந்தமாய் குடியிருந்தேன் ஐந்திரு திங்கள் உன் கருவறையில்.......! உன் உணவே என் உணவாய், உன் உயிரே என் உயிராய், உன் மூச்சே என் மூச்சாய், உனக்குள்ளே உன்னாலே உயிராய் இருந்தேன்......! பெற்றெடுக்க வலி பொறுத்தாய். பெற்றவளே உன்னை எண்ணி, பிறக்கும் போதே நானழுதேன். உயிருக்குள் காத்த என்னை உயிரே நீ ஏன் வெறுத்தாய்? அழுகுரல் பிடிக்கவில்லையோ? அனாதையாய் விட்டுசென்றாய்! வளர்த்திருக்கலாமே என்னை, பார் புகழும் பெண்ணாக அல்ல.....! ஓர் பாமரப் பெண்ணாகவாவது.......! கை பிடித்துக் கொடுக்கவேண்டும் என்று எண்ணியோ கை கழுவிச் சென்று விட்டாய்? காக்க மாட்டாள் இவள் என்று எண்ணியோ கழிவு போல் விட்டெறிந்தாய்? பேர் சொல்ல பிள்ளை இல்லையென ஏங்குவோர் மத்தியில் பெற்ற பிள்ளை என்னை ஏங்கவிட்டு சென்றாய் ஏனோ? பச்சிளங் குழந்தையை படைத்தவனுக்கும் பிடிக்குமாம் பிடிக்கவில்லையோ என்னை உனக்கு? புரியவில்லை உண்மை எனக்கு! பிறக்கும் உரிமை கிடைத்திருந்தால் மாற்றியிருப்பேன் விதியை அன்று! தவழ்ந்திருப்பேன் உன் மடியில் இன்று! இக்கொடுமை இனி முடியும்! புதுநிலைமை பிறப்பெடுக்கும்! அம்மா உன் மகளுக்கு குப்பைத

நட்பு-காதல்

உன்னிடம் நட்பு......! என்னிடம் காதல்......! நீ உண்மையாய் இரு. நான் ஊமையாய் இருக்கிறேன் -செல்லா